எவர் பார்வை எப்படி இருக்கும்?


(தமிழச்சி, 2010 øலை இதழில் வெளிவந்த எனது கட்டுரை)

       
       40 பக்கங்கள் கொண்ட ஒரு புதிய மாத இதழ். விலையோ ரூ.20.  பல வண்ணங்களில் நல்ல தாளில் அச்சிடப்பட்டி ருக்கிறது.  இவ்விதழை பலரிடம் கொடுத்து,   இவ்விதழ் எப்படி உள்ளது? என்று கருத்து கேட்கப்பட்டது.
    அவர்களில் முதல் நபர்எழுத்தின் அளவை இன்னும் ஒரு புள்ளி கூட்டியிருந்தால் படிப்பதற்கு நன்றாக இருந்திருக்கும் என்கிறார்.
 இரண்டாம் நபர்40 பக்கம்தான் இருக்கிறது.  இதற்குப்போய் 20 ரூபாய் கொடுப்பதா? என்கிறார்.
   மூன்றாம் நபர்இப்படி ஒரு அருமையான இதழை நான் இதுவரை கண்டதே இல்லை.  ஒவ்வொரு பக்கத்திலும் பயனுள்ள செய்திகள்.  இவ்வளவு அருமையான இதழ் இருபது ரூபாய்க்குக் கிடைக்கிறது என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்.
  நான்காம் நபர்இவ்விதழில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் அருமை.  கைத்தேர்ந்த புகைப்படக் கலைஞரால்தான் இப்படி நேர்த்தியாக படங்களை எடுத்திருக்க முடியும் என்கிறார்.
 ஐந்தாம் நபர்நல்ல தாளில் அருமையாக அச்சடிக்கப்பட்டுள்ளது.  நான்கு கலரும் ஒன்றன் மீது ஒன்றாக துல்லியமாக உட்கார்ந்திருக்கிறதுஅருமை என்கின்றார். 
   ஆறாவது நபர்இவ்விதழ் துல்லியமாக மடித்து சிறந்த முறையில் பைண்டிங் செய்யப்பட்டுள்ளது என்கிறார்.
      ஏழாவது நபர்பக்கங்கள் அத்தனையும் கற்பனை வளத்தோடு புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறார்.
   எட்டாவது நபர் ஒரு சில பக்கங்களைச் சுட்டிக்காட்டி அதில் உள்ள கருத்துக்களை விமர்சனம் செய்கிறார்.
 ஒன்பதாவது நபர்பளபளப்பான தாள்நல்ல அச்சுபடிப்பதற்கேற்ற எழுத்துக்கள்அருமையான புகைப்படங்கள்புதுமையான இதழ் வடிவமைப்புநேர்த்தியான பைண்டிங்அத்தனையும் படிக்க வேண்டிய படைப்புகள்,  இத்தனை சிறப்புமிக்க இதழ் வெறும் 20 ரூபாய்க்கு கிடைக்கிறதே என்கிறார்.
         இந்த இதழைப் பற்றி கருத்து கூறியிருப்பவர்கள் யார் யார் தெரியுமா?
   புகைப்படக் கலைஞர்அச்சுக் கலைஞர்,  இதழ் வடிவமைப்பாளர்சிறந்த விமர்சகர்சிறந்த பத்திரிகையாளர்பைண்டர்தட்டச்சு செய்பவர்எந்த புத்தகத்தையும் ஆழ்ந்து படித்து நல்லது கெட்டது எதுவென்று அறிந்து கொள்ளாதவர்மற்றும் நல்ல வாசகர்.  
    இதழ் ஒன்றுதான்.  ஆனால்ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறுகின்றனர். பொருள் ஒன்றாக இருந்தாலும்மக்களின் பார்வைகள் வெவ்வேறாகவே இருக்கின்றன. இது எதைக் காட்டுகிறது?
 ஒருவரின் அறிவும்சிந்தனையும் எப்படி இருக்கிறதோஅப்படியே அவரின் பார்வையும் இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
     மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்களை மீண்டும் பாருங்கள். யார் எந்த கருத்தைக் கூறியிருப்பார்கள் என்று பொருத்திப் பாருங்களே!
        சரிஉங்கள் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

Comments