ஒரு நூலகரின் டைரி குறிப்புகள் - பாகம் 2. ஆ). நல்நூலகர் விருதும் சர்ச்சைகளும்
விருது என்றாலே உடன் வருவது சர்ச்சை. அது மாவட்ட அளவில் வழங்கப்படும் சாதாரண விருதாகட்டும் , தேசிய அளவில் வழங்கப்படும் பத்ம விருதாகட்டும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. சர்ச்சைகளுக்கு முக்கியக் காரணம் , விருதுக்குப் பரிந்துரை செய்பவர்களின் விருப்பு வெறுப்பே. பொது நூலகத்துறையில் நூலகர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நல்நூலகர் விருதுக்கு மட்டும் விதிவிலக்கா ? இதோ என்னுடைய அனுபவம். ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20 வரை நடைபெறும் நூலக வாரவிழாவில் சிறப்பாகப் பணிபுரியும் நூலகர்கள் மாவட்டத்துக்கு ஒருவர் என்று தேர்வு செய்து , டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது. நூலகரின் பணிக்காலத்தில் சேர்க்கப்பட்ட புரவலர் , உறுப்பினர் , பெறப்பட்ட நன்கொடைகள் , காலி மனை , கட்டட வசதி ஆகியவை மட்டுமே விருதுக்கான முக்கியத் தக...