Posts

Showing posts from November, 2018

ஒரு நூலகரின் டைரி குறிப்புகள் - பாகம் 2. 1.மரபு மீறப்படுகிறதா?

Image
பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் மரபு திடீரென்று மீறப்பட்டால்,  அதில் ஏதேனும் உள்நோக்கம் உண்டோ? என்கின்ற சந்தேகம் வருவது இயல்பு.  தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் 17.11.2018 அன்று நடைபெற்ற நூலக வார விழாவில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த மரபு மீறப்பட்டுள்ளதாக நூலக நண்பர்கள் பலர் என்னிடம் கூறி வருத்தப்பட்டனர். இந்தச் செயல் எதிர்காலத்தில் ஒரு தவறான முன் உதாரணமாக ஆகி விடும் என்ற அச்சத்தையும்  நண்பர்கள் என்னிடம் வெளிப்படுத்தினர்.   சிறப்பாகச் செயல்படும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படுவது வழக்கம். ஆசிரியர்களுக்குத் தேசிய அளவிலும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது.  மாநில அளவில் அளிக்கப்பட்ட விருதுகள், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட அலுவலரிடம் கொடுத்து வாழ்த்து பெறுவது என்பது எல்லாத் துறையிலும் நடக்கும் சம்பிரதாய நிகழ்வு. நூலகத் துறையில் சிறப்பாகப் பணிபுரியும் நூலகர்களுக்கு வழங்கப்படும் நல்நூலகர் விருது மாநில அளவில் சென்னையில் நடைபெறும் விழாவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. மாவட்...

கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா.

Image
தருமபுரி மாவட்டம் , கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா. தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா 6 நாட்கள் கொண்டாடப்பட்டது. கடத்தூர் கிளை நூலகம் , கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழா   மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது.   இவ்விழாவில் முதல் நாளான 14.11.2018 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில்   புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இரண்டாம் நாள் வியாழக்கிழமை மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் ந.நாகராஜன் ‘ இளமையில் கல் ’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. பெங்களூர் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் விஞ்ஞானி ரா.குந்தவை பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். மூன்று நாட்கள் நிகழ்ச்சிகளுக்கும் தலைமை ஆசிரியை த.வே. ரமாதேவி தலைமை தாங்...