ஜெயகாந்தனின் 'பிரளயம்' என்ன சொல்கிறது?
எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய பிரளயம் என்னும் இந்த நூலை கடந்த வாரம் வாசித்தேன் . இந்தக் கதையில் , சென்னையில் ஆற்றங்கரை ஓரமாக குடிசைகள் போட்டு வாழ்ந்து வரும் கீழ்த்தட்டு மக்களின் சராசரி வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டுகிறார் ஜெயகாந்தன் . கதையின் நாயகி பாப்பாத்தி , அழகப்பர் வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்கிறாள் . அழகப்பர் மகன் செல்வத்துடன் நெருக்கமாக இருக்கிறாள் . அவளுக்கும் ரிக்ஷா ஒட்டும் தீனனுக்கும் திருமணம் நடைபெறுகிறது . திருமணம் முடிந்த அடுத்த நாள் வழக்கம்போல, அழகப்பர் வீட்டிற்கு வேலை க்கு ப் போகிறாள் . செல்வத்தைச் சந்தித்து , " உங்களுக்குத் திருமணம் நடைபெறும் வரை நான் இங்கு வேலைக்கு வரமாட்டேன் " என்று கூறிவிட்டு வந்து விடுகிறாள் . பக்கிரி ஜெயிலுக்கு போய் மூன்று வருடம் கழித்து வருகிறான் . தன் மனைவி பச்சியம்மாளும் குழந்தையும் சாப்பாட்டுக்கு என்ன செய்திருப்பார்களோ என்று வேதனைப்படுகிறான் . இவன் மனைவி மாணிக்கத்தோடு வாழ்வதாகக் கேள்விப்படுகிறான் ....