Posts

Showing posts from 2019

சாந்திக்கு மறு பெயர் காந்தி!

Image
சாந்திக்கு மறுபெயர் காந்தி!    மகாத்மா காந்தி , இந்திய சுதந்திரப் போரட்டத்தில் மக்களைத்திரட்டி , அகிம்சை முறையில் ‘ வெள்ளையனே வெளியேறு ’ என்று பேராடிக்கொண்டிருந்தார். மக்களின் எழுச்சிமிக்கப் போராட்டதை ஆங்கிலேய ஆட்சியாளர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.       அப்போது , பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:     “ இந்த காந்திஜி , துப்பாக்கி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டால் , பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி எடுத்து போராடி இருந்தால் , விமானம் மூலம் அழித்து இருப்பேன். ஆனால் , அவரோ , ஆயுதங்களைப் புறக்கணித்து அகிம்சை , சத்தியம் போன்றவைகளை ஆயுதங்களாகக் கொண்டு போராடியதால் , இதனை வெல்ல உலகில் வேறு ஆயுதம் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் , அவரை வெற்றி கொள்ள இயலாமல் பணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது ”.       ‘ பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் ஒருபோதும் மறையாது (The sun never sets on the British Empire)’ என்று இறுமாப்புடன் ஆட்சி புரிந்துவந்த பிரிட்டிஷ் அரசின் பிரத...

‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ - சிறுகதை

Image
நூலகர் . சி . சரவணன் சிறுகதை ‘ தொடர்பு எல்லைக்கு அப்பால் ’ நூலகர். சி. சரவணன் அலுவலக கண்காணிப்பாளர் ஒவ்வொருவராக அழைத்து போனஸ் தொகை வழங்கிக் கொண்டிருந்தார். செல்வியும் கண்காணிப்பாளரிடம் சென்று கையொப்பமிட்டு மூவாயிரத்தைப் பெற்றுக் கொண்டாள்.  இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்று, ஐந்நூறு ரூபாய் நோட்டு இரண்டு. அதை எண்ணிப் பார்த்தாள் , ஒரு முறைக்குப் பல முறை.  “ஏம்மா, மூ ணு நோட்டுதானே இருக்கு. அதை இத்தனை முறை எண்ணனுமா?” என்றார் கண்காணிப்பாளர். சிரித்துக்கொண்டே செல்வி தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள்.  அவள் எதற்காகச் சிரித்தாள் என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும்.  அவள் இளநிலை உதவியாளராக அந்த அலுவலகத்தில் பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும்மேல் ஆகிறது.  அவளுடைய ஊதியம் அனைத்தும் அவள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதுதான் வழக்கம். வங்கிக் கணக்கைத் தொடங்கி, ஏ.டி.எம். அட்டையை கணவரிடம் கொடுத்ததோடு அவள் வேலை முடிந்துவிட்டது.  அவள் கணக்கில் எவ்வளவு தொகை வரவு வைக்கப்படுகிறது என்பதை அவரிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்வாள்.   ...