Posts

Showing posts from August, 2018

தருமபுரி மாவட்ட புத்தக ஆர்வலர்கள், படைப்பாளர்கள், பதிப்பாளர்கள் கவனத்திற்கு:-

தருமபுரி மாவட்ட புத்தக ஆர்வலர்கள், படைப்பாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோருக்கு நூலகர் சி.சரவணன் எழுதும் மடல். வணக்கம். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் புத்தகத்திருவிழா தொடர்பான செய்திகளை செய்தித்தாள்களில் படிக்கும்போதெல்லாம், தருமபுரியில் அப்படிப்பட்ட புத்தகத் திருவிழா நடக்காதா என்று நம்மில் பலரும் ஏங்கியிருக்கிறோம். அந்த ஏக்கம் அண்மையில் நடந்து முடிந்த புத்தகத்திருவிழா மூலம் நிறைவேறியுள்ளது. இந்த புத்தகத்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த மருத்துவர் இரா.செந்தில், தோழர் சிசுபாலன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியையும், வாழ்த்துகளையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். புத்தகத்திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள இந்த நேரத்தில்,  என் மனதில் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த மனக்குறை ஒன்றைப் பற்றியும் உங்கள் முன் விவாதப் பொருளாக முன்வைக்க விரும்புகிறேன். தருமபுரி மாவட்டத்தில் எத்தனை பதிப்பகங்கள் உள்ளன? அவை பதிப்பித்த பழைய நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளனவா? மாவட்டத்தில் எத்தனை எழுத்தாளர்கள் உள்ளனர்? எத்தனை கவிஞர்கள் உள்ளனர்? எந்தெந்த கவிஞரின் கவிதைகள் எந்தெந்த இதழ்களில் வெளிவந்...

நூலக நண்பர்களுக்கு நூலகர் சி.சரவணன் எழுதும் அன்பு மடல்.

Image
வணக்கம் .   நான் எழுதியுள்ள ஒரு நூலகரின் டைரி குறிப்புகள் என்னும் நூல் இம்மாதம் தருமபுரியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது என்கின்ற செய்தியை தாங்கள் அறிவீர்கள் . நூலக நண்பர்கள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு எனது நூல் பற்றி கேட்டறிந்தனர் .   இது பற்றி உங்களிடம் சில கருத்துகளைப் பரிமாறிக்கெள்ள விரும்புகிறேன் .   நான் பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தில் மாநிலப் பொதுச் செயலாளராக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பு வகித்துள்ளேன் . எனது பதவிக்காலத்தில் நூலகர்களின் நலனுக்கும் , பொது நூலகத்துறை வளர்ச்சிக்கும் நான் ஆற்றிய பணிகளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று நூலக நண்பர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் .        “ என் பணிகளைப் பற்றி எழுதி விளம்பரம் தேடிக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை ” என்று மறுப்பு தெரிவித்தேன் . “ உங்கள் பணிக்காலத்தில் நீங்கள் செய்த பணிகள் , அத்துடன் உங்களது பணிக்காலத்தில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு...