புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு (நூலகர்களுக்கு) எவ்வளவு பென்ஷன் வரும்?
1.4.2003 அன்றுக்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் திட்டம் ( Defined pension scheme) இல்லை என்றும் , அதற்குப் பதிலாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து , நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். புதிய ஓய்வூதியத் திட்டம் கூறுவது என்ன ? ஓர் அரசு ஊழியர் பெறும் ஊதியத்தில் 10 % தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அதற்கு இணையாக 10 % தொகை அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தத் தொகைக்கு வட்டியாக ஆண்டுக்கு 8.7 % சேர்க்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை மத்திய அரசின் Pension Fund Regularity and Development Authority (PFRDA) இல் செலுத்த வேண்டும். தமிழக அரசு இந்தத் தொகையை இன்றுவரை செலுத்தவில்லை என்று PFRDA அறிக்கையில் கூறியிருக்கிறது. PFRDA இந்தத் தொகையை கையாள Pension fund managers என்னும் ஒரு குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு நமது பணத்தை LIC, UTI முதலான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யு...