அதிகரித்து வரும் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள் - தீர்வு என்ன?
நூலகர் சி. சரவணன். அண்மைக்காலமாக ஆசிரியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால், ஆசிரியர்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் மனக்குமுறல்களை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. மருத்துவர்களைப்போல, ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூட ஆசிரியர்கள் சிலர் பதிவு போடுகிறார்கள். அந்த பதிவுக்கு ஆசிரியர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது. இன்றைக்கு ஆசிரியர்கள் மட்டும் இது போன்ற தாக்குதல்களை சந்தித்து வருகிறார்கள் என்று இல்லை. அனைத்து துறை அரசு ஊழியர்களும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், மற்ற துறை அரசு ஊழியர்கள் அதை எளிதாக எதிர்கொள்கிறார்கள். 'அரசு ஊழியர் சங்கம்' ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. அறநிலையத்துறை அலுவலர் ஒருவர் தாக்கப்படபோது, அரசு ஊழியர் சங்கம் பிரச்சினையை கையில் எடுத்தது. தாக்குதலில் தொடர்பு உடையவராக சொல்லப்பட்ட அமைச்சர் ஒருவரின் பதவி பறிபோனது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை வந்தபோது, அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர்...