Posts

Showing posts from May, 2023

நூலகங்களின் சேவைகளை மேம்படுத்துவோம்!

Image
சி. சரவணன் உலகில் உள்ள இலட்சக்கணக்கான உயிரினங்களில் மனிதன் மட்டுமே தனக்குத் தேவையான கருவிகளை உருவாக்கி வசதியாக வாழ்ந்து வருகிறான். ஏனைய உயிரினங்கள், தாங்கள் தோன்றியபோது எப்படி வாழ்ந்தனவோ, அப்படியே இன்றும் வாழ்ந்து வருகின்றன. காடுகளிலும் மலைகளிலும், விலங்குகளோடு விலங்காக வாழ்ந்துவந்த மனிதர்கள், தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மொழியைக் கண்டுபிடித்து, வாழ்க்கை அனுபவங்களை வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லி வந்தனர். அடுத்தடுத்து வந்த தலைமுறை மனிதர்கள், முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை, தற்காலத்துக்கு ஏற்ப மேம்படுத்தி வந்ததால், மனித சமூகம் நாகரிக சமூகமாக மாறியது.  மனிதர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைக் கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், தோல்கள், சுட்ட களிமண் தகடுகள், ஓலைச் சுவடிகள், உலோகத் தகடுகள் போன்றவற்றில் பதிவு செய்து வந்தனர். காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, புத்தகங்கள் மனிதர்களின் அறிவை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கல்வி மற்றும் அறிவை வளர்க்கவும், உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரம் மற்றும் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் புத்தகங்கள் உறுதுணையாக இருக்கின்றன.  மனிதனை நல்வழி...