கரோனா: இந்தியாவில் தனிநபர் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது ஏன்?
கரோனா வைரஸ் நோயால் இந்தியாவில் தனிநபர் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2008 - 09 ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்த போது, உலக நாடுகள் எல்லாம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தன. வல்லரசு நாடுகளெல்லாம் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியடைந்து, மீள முடியாத் துயரத்தில் ஆழ்ந்தன. பல நாடுகளில் வங்கிகள் பலவும் திவால் ஆகின. வல்லரசு நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் வங்கிகளில் கடன் வழங்கி வீடு வாங்கியவர்களால் தவணைத் தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் வங்கிகளில் கடன் பெற்று வீடு வாங்கியவர்கள் தங்களுக்கு வீடு வேண்டாம் என்றனர். அதனால், வங்கிகள் அந்த வீடுகளைக் கையகப்படுத்தி ஏலம் விட்டன. ஏலத்தில் வீடுகள் வாங்க யாரும் முன்வரவில்லை. கையகப்படுத்திய வீடுகளை விற்க முடியாமல் வங்கிகள் தடுமாறின. இதனால், வங்கியில் முதலீடு செய்தவர்களுக்கு வங்கிகள் பணம் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆவதைத் தவிர்க்க அந்த நாட்டு மத்திய வங்கியான அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, நலிவுற்ற வங்கி...