மனநிறைவோடு பணி நிறைவு
மனநிறைவோடு பணி நிறைவு நூலகர் சி. சரவணன் இன்றோடு (31.5.2025) என் நூலகர் பணி நிறைவடைகிறது; 26 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறேன். 1999இல் பெரும் கனவோடு இந்த துறையைத் தேர்வு செய்தேன். இந்தத் துறையில் நுழைவதே அன்று பெரும் போராட்டமாக இருந்தது. அந்தப் போராட்டம் இன்றுவரை இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதிகம் படிக்க வேண்டும்; புத்தகங்கள் எழுத வேண்டும்; பத்திரிகைகள் நடத்த வேண்டும் என்பதுதான் என் ஆரம்ப காலக் கனவாக இருந்தது. அதில் கொஞ்சம் நிறைவேறியது. தமிழச்சி என்னும் பல்சுவை மாத இதழைச் சில ஆண்டுகள் நடத்தினேன். நூலகர் குரல் என்னும் சங்கப் பத்திரிகைக்கு இணை ஆசிரியராக இருந்தேன். துறை சார்ந்த பிரச்சினைகள், துறைக்கு ஆலோசனைகள் என்று எல்லாம் தைரியமாக எழுதி வந்தேன். நூலகத் துறை எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. நூலகர்கள் நலனில் நான் காட்டிய அக்கறையும், போராட்டக் குணமும் பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக என்னை உயர்த்தியது. அந்தப் பொறுப்பில் இருந்த நான்கு ஆண்டுகளில் நூலகத்துறை வளர்ச்சிக்கு ஆலோசனைகள் பல அப்போது வழங்கி இருக்கிறேன். அவற்றுள் சில நடைமுறைப் படுத...