மூன்றாம் நிலை நூலகர் பணிமூப்புப் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளனவா?
மூன்றாம் நிலை நூலகர்களுக்கான பணிமூப்புப் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பல மாவட்ட நூலக நண்பர்கள் என்னுடன் பேசி வருகின்றனர் . குறிப்பாக, மாவட்ட மாறுதலில் வந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டு வருத்தப்படுகின்றனர் . கோரிக்கை மனுவின் மாதிரிக் கடிதம் ஒன்று எழுதுமாறு நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மாதிரிக் கடிதம் ஒன்றை நண்பர்கள் பார்வைக்கு வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிட்டேன். அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் இருந்து நூலக நண்பர்கள் பணிமூப்பு பட்டியல் பற்றி வேறு சில பிரச்சினைகளைப் பற்றியும் குறிப்பிட்டு வருத்தப்பட்டனர். அவற்றில் சில: ஊர்ப்புற நூலகங்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டபோது, சொந்த மாவட்டத்தில் பணியிடம் இருந்தும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டதாக பலர் குறிப்பிட்டனர். அவர்கள் மீண்டும் சொந்த மாவட்டத்திற்கு திரும்பியபோது பணிமூப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர் . நூலகர் ஒருவர் பேசும் போது, நாங்கள் ஊர்ப்புற நூலகராக...