ஏன் இந்த முரண்?
மயந்தி அவர்களுக்கு வணக்கம், “ஏன் கௌசல்யாக்கள் நம் சமூகத்திற்கு தேவை’ என்னும் தங்களது கட்டுரை இந்து தமிழ் நாளிதழில் இன்று படித்தேன். தாங்கள் பெண்களுக்கு ஆதரவாக எழுதுவதை பாராட்டுகிறேன். அதேநேரத்தில் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும். கௌசல்யாவால் சங்கர் செத்துப் போனான். கௌசல்யா வேறு ஒருவனை காதலித்தாள். அவர்களுக்கு கொளத்தூர் மணி திருமணம் செய்து வைத்தார். அந்தப் பையன் வேறொரு பெண்ணையும் காதலித்து வந்திருக்கிறான். கொளத்தூர் மணிதான் பைசல் செய்து அந்த பெண்ணிற்கு பணம் கொடுத்து அனுப்பினார். இப்பொழுது கௌசல்யா வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டாள். சங்கர் குடும்பம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. நீங்களும் கூட. சங்கர் குடும்பம் இன்று படும் கஷ்டங்களுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவள் கௌசல்யா. அவளை நீங்கள் ரோல் மாடலாக எழுதியிருப்பது ஏற்புடையதாக இல்லை. திவ்யா அனுமதி இல்லாமல் அவள் படத்தை பேனரில் போட்டது தவறு தானே! இளவரசன் இறந்த போது திவ்யா கர்ப்பமாக இருந்தாள் என்பது அபாண்டம். ஆதாரம் இல்லாமல் இப்படி நீங்கள் எழுதியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. காதல் என்பது இருவர் தொடர்புடையது. அதன் போ...