ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 11. .இயக்குநருக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு கோரிக்கை வைத்தேன்:
முனைவர் க . அறிவொளியைத் தொடர்ந்து திரு . க . அன்பழகன் அவர்கள் 21.9.2011 அன்று பொது நூலகத் துறை இயக்குநராகப் பொறுப்பேற்றார் . எட்டு மாதங்கள் மட்டுமே அவர் பணிபுரிந்தாலும் சிறப்பாகச் செயல்பட்டார் . இயக்குநருக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு கோரிக்கை வைத்தேன்: ‘ நூலக அறிவியல் படித்தவர்கள் மட்டும் பொது நூலக இயக்குநராகப் பொறுப்பு ஏற்க வேண்டும் ’ என்று பொது நூலகத்துறையில் பணிபுரியாத ஒருவர் தொடுத்த வழங்கில் , ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின்படி ‘ நூலக அறிவியல் படித்தவர்தான் இயக்குநராக நியமிக்கப்படவேண்டும் ’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் பின்னணியில் நூலகர்கள் சிலர் இருந்துள்ளனர். அந்தத் தீர்ப்பை மாவட்ட நூலக அலுவலர்களும் நூலகர்களும் பெரிதாக வரவேற்றனர். வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு என்றெல்லாம் வர்ணித்தனர். ஆனால் , என்னைப் பொருத்த வரையில் அது நூலகர் நலனுக்கு எதிரான தீர்ப்பு என்று ஒவ்வொரு கூட்டத்திலும் கருத்து தெரிவித்தேன். நான் நூலகர்களுக்கு எதிராகப் பேசுவதாகப் பலரும் என்னை விமர்சனம் செய்தனர். அ...