Posts

Showing posts from May, 2018

ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 4. நூலகங்கள் தரம் உயர்த்தக் கோரிக்கை - ஒரே நாளில் 32 ஆயிரம் புத்தகங்களையும் சரிபார்த்தது:

Image
   நூலகர். திரு. பிரமோத் அவர்களின் கோரிக்கை ஒன்றினை நிறைவேற்றிக் கொடுத்ததற்கு அவர் எனக்கு நல்லாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் எம்.ஜி.எஸ். மற்றும் மாநில நிர்வாகிகள்.   முக்கிய தபால் கொடுப்பதற்காக ஒரு நாள் கடலூர் மாவட்ட நூலக அலுவலகம் சென்றிருந்தேன். “ நீ சரியாக வேலைக்கு வருவதில்லை என்று புகார் வருகிறது. போய் ஒழுங்காக வேலை செய் ” என்றார் மாவட்ட நூலக அலுவலர் திரு.சி.அசோகன்.     நான் புவனகிரியிலேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை செய்து வந்தேன். வியாழன் மாலைதான் புறப்பட்டு வருவேன். சனிக்கிழமை காலை நூலகத்திற்குச் சென்று விடுவேன். அப்படி இருந்தும் திரு.சி.அசோகன் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நூலகர்களில் ஒருவர்தான் என்னைப் பற்றி அவரிடம் தவறாகச் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். “ வாசகர்கள் புகார் தெரிவித்தார்களா ? நூலகர்கள் புகார் தெரிவித்தார்களா ?” என்றேன். “ யாரோ ஒருவர். புகார் வந்திருக்கிறது , அவ்வளவுதான் ” என்றார். “ வாசகர் புகார் தெரிவித்திருந்தால் அதற்குப் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். ஆனால் , நூலகர் புகா...