Posts

Showing posts from 2025

மெரினா போராட்டமும் நேபாளம் போராட்டமும்

Image
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டத்தால் அந்த நாட்டின் நாடாளுமன்றமும் உச்ச நீதிமன்றமும் அரசு அலுவலகங்களும் வாகனங்களும் எரிக்கப்பட்டன.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்ந்தது. அமைச்சர்கள் பலரும் தாக்கப்பட்டனர். அவர்கள் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த போராட்டங்கள் எல்லாம் 27 வயதுக்குட்பட்ட இளைஞர்களால் நடத்தப்பட்டன. ஏன் இந்தப் போராட்டம்? சமூக ஊடகங்கள் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன . சமூக ஊடகங்களை சிலர் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். சிலர் நாட்டில் குழப்பம் விளைவிக்கவும், பிறரிடம் பணம் பறிக்கவும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர் பொழுதுபோக்குக்காக பயன்படுத்துகின்றனர். இதனால் பல நாடுகள், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து சட்டங்கள் இயற்றி வருகின்றன. அப்படித்தான் நேபாள சுப்ரீம் கோர்ட்டும் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தமாறு அரசுக்கு உத்தரவிட்டது. சமூக ஊடகங்களில் பொழுது போக்கும் இளைஞர்கள் ‘எங்கே சமூக ஊடகங்கள் நிறுத்தப்படுமோ’ என்ற அச்சத்தில் போராட்டங்களை சமூக ...

ஏன் இந்த முரண்?

மயந்தி அவர்களுக்கு வணக்கம்,  “ஏன் கௌசல்யாக்கள் நம் சமூகத்திற்கு தேவை’ என்னும் தங்களது கட்டுரை இந்து தமிழ் நாளிதழில் இன்று படித்தேன். தாங்கள் பெண்களுக்கு ஆதரவாக எழுதுவதை பாராட்டுகிறேன். அதேநேரத்தில் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும். கௌசல்யாவால் சங்கர் செத்துப் போனான். கௌசல்யா வேறு ஒருவனை காதலித்தாள். அவர்களுக்கு கொளத்தூர் மணி திருமணம் செய்து வைத்தார். அந்தப் பையன் வேறொரு பெண்ணையும் காதலித்து வந்திருக்கிறான். கொளத்தூர் மணிதான் பைசல் செய்து அந்த பெண்ணிற்கு பணம் கொடுத்து அனுப்பினார். இப்பொழுது கௌசல்யா வாழ்க்கையில்  செட்டில் ஆகிவிட்டாள். சங்கர் குடும்பம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. நீங்களும் கூட. சங்கர் குடும்பம் இன்று படும் கஷ்டங்களுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவள் கௌசல்யா. அவளை நீங்கள் ரோல் மாடலாக எழுதியிருப்பது ஏற்புடையதாக இல்லை. திவ்யா அனுமதி இல்லாமல் அவள் படத்தை பேனரில் போட்டது தவறு தானே! இளவரசன் இறந்த போது திவ்யா கர்ப்பமாக இருந்தாள் என்பது அபாண்டம். ஆதாரம் இல்லாமல் இப்படி நீங்கள் எழுதியது மிகவும் வருத்தம் அளிக்கிறது.  காதல் என்பது இருவர் தொடர்புடையது. அதன் போ...