புதுமை நூலகர் மன்றம் (Innovative Librarians Forum)
நூலக நண்பர்களுக்கு வணக்கம் , தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தமிழகத்தில் உள்ள மற்ற துறைகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதைப் பத்திரிகை ச் செய்திகள் வாயிலாக நாம் அறிகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடத் திட்டம் மாற்றம் , கற்பித்தலில் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது , ஆசிரியர்களுக்குப் பயிற்சி , நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை என்று பள்ளிக் கல்வித்துறை நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இதன்மூலம் பொதுமக்களுக்கு பள்ளி கல்வித்துறை மீது மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது. பொது நூலகத் துறையும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வருகிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவேனும் நூலகத் துறைக்கு கொடுத்தால் நூலக சேவைகள் மேம்படும் , நூலகர்கள் கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படும் என்று நூலக நண்பர்கள் தங்களுக்குள் பேசி வருகின்றனர். கடந்த வாரம் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றில் நூலக துறையின் இயக்குநர் பணியிடம் கடந்த...