ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 10. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளைத் தொடங்கக் வேண்டும் என்ற எனது கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்று அரசாணை வெளியிட்டது.
அடுத்து என்ன தலைப்பில் கட்டுரை எழுதலாம் என்று யோசித்தேன் . அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைத்து வருவதைத் தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றித் தினமணிக்கு கட்டுரை ஒன்றை எழுதுவது என்று முடிவு செய்தேன் . சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில் ஒரு தனியார் அமைப்பு கல்விக் கருத்தரங்கம் நடத்தியது . தத்தளிக்கும் தமிழகக் கல்வி என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்திற்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுவதாகச் செய்தித்தாளில் விளம்பரம் வந்தது . அதில் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் கருத்தரங்கில் வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது . தத்தளிக்கும் தமிழகக் கல்வி என்ற தலைப்பில் அரசுப் பள்ளிகளில் நிலைமை குறித்தும் , அரசு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்ககைள் குறித்து 15 பக்கங்கள் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பினேன் . அக்கட்டுரைக்குத் தேவையான பல்வேறு குறிப்புகளை அரசுப்பள்ளி ஆசிரியையாக இருக்கும் எனது மனைவ...