பத்ம சேஷாத்ரி பள்ளி சம்பவம் - ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?
சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் ஒருவர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது. அந்தச் செய்தியை ஏன் இவ்வளவு பெரிய தலைப்புச் செய்தியாக செய்தித்தாள்கள் வெளியிடுகின்றன? தொலைக்காட்சிகளில் முதன்மைச் செய்தியாக தொடர்ந்து சில நாட்களாக வாசிக்கப்படுவது ஏன்? அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது இதுபோன்ற புகார்கள் ஆண்டுக்கு ஒன்றிரண்டு வருவதை நாம் பார்க்கிறோம். இந்த புகார்கள் உண்மையானவையா? என்று விசாரணை செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே வேளையில், புகார் கொடுக்கப்பட்டது என்பதற்காகவே சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஒரு குற்றவாளியாக சித்தரித்து 'அவன், இவன்' என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவது வேதனை அளிக்கிறது. சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் இது போன்ற பாலியல் புகார்கள் ஏற்கனவே வந்துள்ளன. இந்த ஊடகங்கள் அந்தச் செய்திகளை இது போன்று முதன்மைச் செய்தியாக வெளியிடாதது ஏன்? ஆசிரியர்கள் என்றால் அவ்...