நூல் பயன்பாட்டுக் கழிவு – ஆயிரம் நூல்களுக்கு 3 நூல்கள் என்பதை 5 நூல்களாக உயர்த்தக் கோருதல்
அனுப்புநர் சி.சரவணன் , மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் , பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் , 1,47, நல்லகுட்லஅள்ளி ரோடு , கடத்தூர் அஞ்சல் , தருமபுரி மாவட்டம் , 635303. கைப்பேசி: 9442265816. பெறுநர் முதலமைச்சரின் தனிப்பிரிவு , தலைமைச் செயலகம் , சென்னை - 600009. ஐயா , பொருள்: தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை - நூலகங்களில் நூல் பயன்பாட்டுக் கழிவு – ஆயிரம் நூல்களுக்கு 3 நூல்கள் என்பதை 5 நூல்களாக உயர்த்தக் கோருதல் – தொடர்பாக. பார்வை : 1. பள்ளிக்கல்வித் (கே 2) துறை , அரசாணை (நிலை) எண். 211, நாள்: 23.11.2005. 2. General Financial Rules 2017, Ministry of finance, Department of expenditure, Rule 215 Physical verification of library books. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை , பொது நூலக இயக்ககத்தின் கீழ் 1926 கிளை நூலகங்கள் , 1914 ஊர்ப்புற நூலகங்கள் உட்பட மொத்தம் 4603 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நூலகங்களில் வாசகர்கள் புத்தகங்களைக் கையாள திறந்த அணுகல் அமைப்பு முறை (open access system ) நடைமுறைப் படுத்தப்படுவதாலும் ...