Posts

Showing posts from August, 2023

இயக்குநர் நியமனம் - நூலகத் துறைக்கு விடிவு காலமா?

Image
பொது நூலகத்துறை இயக்குநராக திரு க. இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.   அவர்கள் 12.7.2023 அன்று பொறுப்பேற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. பொது நூலகத் துறை இயக்குநர் பணியிடம் கடந்த 12 ஆண்டுகளாக காலியாக இருந்தது. இதனால், பொது நூலகத் துறையின் வளர்ச்சியும், நூலகர்களின் நலனும்  பெரிதும் பாதிக்கப்பட்டது.  பொது நூலக இயக்குநர் பணியிடத்தை நிரப்ப அரசு பலமுறை நடவடிக்கை எடுத்தது. பெறப்பட்ட விண்ணப்பங்களில் சரியான நபர்/ தகுதியான நபர் யாரும் கிடைக்காததால்தான், அரசு இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. இது தற்காலிக ஏற்பாடா? இறுதியான முடிவா?  என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், அரசு எடுத்த இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.  பிளாஷ்பேக் : பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்களுக்கு பொது நூலகத்துறை இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டு வந்தது. அவர்களில் சிலர் நூலகத்துறை வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பொது நூலகத்துறை இயக்குநராக இருந்த திரு.வே.ரமணி, திரு. க. அறிவொளி ஆகியோரின் பணிக் காலம் நூலகத்துறையின் பொற்காலம் என்று சொல்லலாம். திரு.வே.ரமணி அவர்களின் பணிக்காலத்தில்,...