மூன்றாம் நிலை நூலகர் சீனியாரிட்டியில் அப்படி என்ன பிரச்சனை?
அண்மையில் மூன்றாம் நிலை நூலகர்கள் சிலருக்கு இரண்டாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதில் 2006 அக்டோபர் பேட்ச் நூலகர்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் சீனியாரிட்டி முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தப்பட்டார் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நூலகர் திரு. சிவகுமார். “சீனியாரிட்டி லிஸ்ட் வெளியிடாமல் எப்படி மூன்றாம் நிலை நூலகர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது? நன்றாக சரி பார்த்துச் சொல்லுங்கள்” என்றேன். சில ஆதாரங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினார். அதைப் பார்த்து வியந்தேன். “மாநிலம் முழுவதும் நூலகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. நீங்கள் பொதுச் செயலாளராக ஏழு, எட்டு ஆண்டுகள் இருந்தீர்கள். இதைப் பற்றி நிச்சயம் உங்களுக்குத் தெரியும். நீங்கள்தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்” என்றார். நான் சொன்னேன், “ 2006 பேட்ச் சீனியாரிட்டி லிஸ்டில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, புதிய சீனியாரிட்டி லிஸ்ட் வெளியிட்டு, அதன்படி பதவி உயர்வு வழங்குங்கள் என்றும், அதுவரை தற்பொழுது வழ...