நூலகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த...
" தமிழகத்தில் பொது நூலகங்களின் செயல்பாடுகள் மோசம்" என்று ஒரு முன்னணி செய்தித்தாளில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது. இந்த செய்தி பல்வேறு நூலகர் குழுக்களில் பதிவு செய்யப்பட்டது. இந்த பத்திரிக்கைச் செய்தி பற்றிய என்னுடைய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசிய அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி , " நூலகத்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை" என்று பேசினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நூலகத் துறை நண்பர்கள் அந்த நிகழ்ச்சியை மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நூலகங்களின் செயல்பாடுகளை விமர்சித்து , பல ஆண்டுகளாக பத்திரிகைகள் பலவும் எழுதி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த பத்திரிகைச் செய்தியையும் நான் பார்க்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக நூலகத்துறை கவனிப்பாரற்று இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் , இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நூலகத்துறையின் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நூலகத்துறை இயக்குநர் பொறுப்புக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டது , இந்த அரசு நூலக...