Posts
Showing posts from 2018
ஒரு நூலகரின் டைரி குறிப்புகள் - பாகம் 2. 1.மரபு மீறப்படுகிறதா?
- Get link
- X
- Other Apps
பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் மரபு திடீரென்று மீறப்பட்டால், அதில் ஏதேனும் உள்நோக்கம் உண்டோ? என்கின்ற சந்தேகம் வருவது இயல்பு. தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் 17.11.2018 அன்று நடைபெற்ற நூலக வார விழாவில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த மரபு மீறப்பட்டுள்ளதாக நூலக நண்பர்கள் பலர் என்னிடம் கூறி வருத்தப்பட்டனர். இந்தச் செயல் எதிர்காலத்தில் ஒரு தவறான முன் உதாரணமாக ஆகி விடும் என்ற அச்சத்தையும் நண்பர்கள் என்னிடம் வெளிப்படுத்தினர். சிறப்பாகச் செயல்படும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படுவது வழக்கம். ஆசிரியர்களுக்குத் தேசிய அளவிலும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது. மாநில அளவில் அளிக்கப்பட்ட விருதுகள், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட அலுவலரிடம் கொடுத்து வாழ்த்து பெறுவது என்பது எல்லாத் துறையிலும் நடக்கும் சம்பிரதாய நிகழ்வு. நூலகத் துறையில் சிறப்பாகப் பணிபுரியும் நூலகர்களுக்கு வழங்கப்படும் நல்நூலகர் விருது மாநில அளவில் சென்னையில் நடைபெறும் விழாவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. மாவட்...
கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா.
- Get link
- X
- Other Apps
தருமபுரி மாவட்டம் , கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா. தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா 6 நாட்கள் கொண்டாடப்பட்டது. கடத்தூர் கிளை நூலகம் , கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் முதல் நாளான 14.11.2018 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இரண்டாம் நாள் வியாழக்கிழமை மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் ந.நாகராஜன் ‘ இளமையில் கல் ’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. பெங்களூர் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் விஞ்ஞானி ரா.குந்தவை பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். மூன்று நாட்கள் நிகழ்ச்சிகளுக்கும் தலைமை ஆசிரியை த.வே. ரமாதேவி தலைமை தாங்...
புதுமை நூலகர் மன்றம் (Innovative Librarians Forum)
- Get link
- X
- Other Apps
நூலக நண்பர்களுக்கு வணக்கம் , தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தமிழகத்தில் உள்ள மற்ற துறைகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதைப் பத்திரிகை ச் செய்திகள் வாயிலாக நாம் அறிகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடத் திட்டம் மாற்றம் , கற்பித்தலில் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது , ஆசிரியர்களுக்குப் பயிற்சி , நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை என்று பள்ளிக் கல்வித்துறை நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இதன்மூலம் பொதுமக்களுக்கு பள்ளி கல்வித்துறை மீது மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது. பொது நூலகத் துறையும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வருகிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவேனும் நூலகத் துறைக்கு கொடுத்தால் நூலக சேவைகள் மேம்படும் , நூலகர்கள் கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படும் என்று நூலக நண்பர்கள் தங்களுக்குள் பேசி வருகின்றனர். கடந்த வாரம் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றில் நூலக துறையின் இயக்குநர் பணியிடம் கடந்த...
நகைச்சுவைத் தொடர்: 12. நல்ல பெயர் வைக்க வேண்டுமா?
- Get link
- X
- Other Apps
“ கப்பல் ஓட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் யார் ?” இது அண்மையில் நான் ஒரு பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் கேட்ட கேள்வி . வ . உ . சிதம்பரனார் என்று மாணவர்கள் பலரும் பதில் அளித்தனர் . அன்று மாலையே நூலகம் சென்று பெரியவர்கள் சிலரைச் சந்தித்து இதே கேள்வி கேட்டேன் . அவர்களிடம் இருந்து வந்த பதில் வ . உ . சிதம்பரம் பிள்ளை என்பது . கேள்வி ஒன்றுதான் . ஆனால் , பதில் இரண்டாக வந்தது . இதில் சரியான விடை எது ? இதேக் கேள்வி நேர்முகத்தேர்வு ஒன்றில் கேட்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் . தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நேர்முகத் தேர்வு நடத்தினால் இரண்டு பதிலில் எதைச் சொன்னாலும் மதிப்பெண் கொடுத்துவிடுவார் . அதில் எந்த சந்தேகமும் இல்லை . இதேக் கேள்வி தேசிய அளவிலான போட்டுத்தேர்வு நேர்காணல் ஒன்றில் ஆங்கிலத்தில் கேட்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் . நேர்முகத்தேர்வு நடத்துபவர் வட மாநில அலுவலராக இருந்தால் சிதம்பரம் பி...