நகைச்சுவை தொடர்: 1. கைப்பேசி
C.Saravanan கைப்பேசி தொலைந்து போனால் புதியதாக வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் , அதில் உள்ள தொடர்பு எண்களை எப்படி மீட்க முடியும் ? மனைவியின் கைப்பேசி எண்ணைக்கூட நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லையே! கைப்பேசியைத் தொலைத்தவர்கள் படும் பாட்டைப் பார்த்தால் தெரியும் , அதன் பாதிப்பு என்னவென்று. அதனால் , வெளியூர் பயணத்தின் போது கைப்பேசியை யாராவது எடுத்து விடுவார்களோ என்று சட்டைப் பையை அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பது என் வழக்கம். இது எனக்கு ஒரு அ னி ச்சைச் செயல் போல் ஆகிவிட்டது. இன்றும் இப்பழக்கம் தொடர்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்யும்போது , வழக்கம்போல சட்டைப் பையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். என் அருகில் அமர்ந்தவர் ஒரு நிறுத்தத்தில் இறங்கியதால் , நடுத்தர வயதுடைய பெண் ஒருத்தி என் அருகில் அமர்ந்தாள். என்னைப்போல் அவளும் அவ்வப்போது அவளுடைய ஜாக்கெட்டைத் தொட்டுத் தொட்டுப் பார்த்த்துக் கொண்டே இருந்தாள். என்னுடைய செய்கையைக் கிண்டல்...