Posts

Showing posts from 2021

மூன்றாம் நிலை நூலகர் பணிமூப்புப் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளனவா?

     மூன்றாம் நிலை நூலகர்களுக்கான பணிமூப்புப் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பல மாவட்ட நூலக நண்பர்கள் என்னுடன் பேசி வருகின்றனர் . குறிப்பாக, மாவட்ட மாறுதலில் வந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டு வருத்தப்படுகின்றனர் .   கோரிக்கை மனுவின் மாதிரிக் கடிதம் ஒன்று எழுதுமாறு நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மாதிரிக் கடிதம் ஒன்றை நண்பர்கள் பார்வைக்கு வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிட்டேன். அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் இருந்து நூலக நண்பர்கள் பணிமூப்பு பட்டியல் பற்றி வேறு சில பிரச்சினைகளைப் பற்றியும் குறிப்பிட்டு வருத்தப்பட்டனர். அவற்றில் சில: ஊர்ப்புற நூலகங்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டபோது, சொந்த மாவட்டத்தில் பணியிடம் இருந்தும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டதாக பலர் குறிப்பிட்டனர். அவர்கள் மீண்டும் சொந்த மாவட்டத்திற்கு திரும்பியபோது பணிமூப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர் . நூலகர் ஒருவர் பேசும் போது, நாங்கள் ஊர்ப்புற நூலகராக...

மாணவிகளுக்கு நடைபெறும் திருமணங்கள் - அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீண்ட காலமாக 18 வயது நிறைவடையாத பள்ளி மாணவிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.  இந்த கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஓராண்டாகப் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதில்லை. இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு அங்கொன்றும், இங்கொன்றும் எனத் திருமணங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளில் 7 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பல மாணவிகளுக்கு திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. 18 வயது நிறைவடையாத பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அனைவரும் அறிவர். அப்படி இருந்தும் கிராமங்களில் சிறுமிகளுக்குத் திருமணங்கள் நடந்து வருவது தொடர்கிறது. இதுபோன்ற திருமணங்கள் மண்டபங்களிலோ, வீடுகளிலோ நடைபெறுவதில்லை. பெரும்பாலும் கோவில்களில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடைபெறுகின்றன. கோவில் நிர்வாகத்துக்கும், பூசாரிக்கும் இளம் வயது திருமணம்  தவறு என்ற...

தொடர்ச்சியாக நூலகர்களின் மரணச்செய்தி - ஏன் இந்த அவல நிலை?

அண்மைக்காலமாக நூலகர்களின்  இறப்புச்செய்தி சமூக ஊடகங்களில் அவ்வப்போது வந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.  இதுவரை 12 க்கும் மேற்பட்ட நூலகர்கள் இறந்து விட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரம் நூலகர்கள்தான் இருப்பார்கள். இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் உள்ள நூலகர்களில் ஏன் இத்தனை மரணங்கள்? ஆசிரியர்கள் இப்படி இறந்ததாகச்  செய்திகள் இல்லையே? அப்படியே ஒன்றிரண்டு செய்திகள் வந்தாலும் அது அவர்களின் மொத்த எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே. கொரோனா  வைரஸின் முதல்  பரவல் முடிந்ததாக தவறாக செய்தி பரப்பப்பட்டது. ஆனால், இரண்டாவது அலை வரலாம் என்று மருத்துவ வல்லுநர்களால் சொல்லப்பட்டது. அதை யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.    மார்ச் மாதத்தில் மருத்துவர்கள், மருத்துவ துறை பணியாளர்கள், காவல் துறை பணியாளர்கள், சுகாதார துப்புரவு பணியாளர்கள் முதலான முன் களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது....

பத்ம சேஷாத்ரி பள்ளி சம்பவம் - ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் ஒருவர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது. அந்தச் செய்தியை ஏன் இவ்வளவு பெரிய தலைப்புச் செய்தியாக செய்தித்தாள்கள் வெளியிடுகின்றன?  தொலைக்காட்சிகளில் முதன்மைச் செய்தியாக தொடர்ந்து சில நாட்களாக வாசிக்கப்படுவது ஏன்?   அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது இதுபோன்ற புகார்கள் ஆண்டுக்கு ஒன்றிரண்டு வருவதை நாம் பார்க்கிறோம். இந்த புகார்கள் உண்மையானவையா? என்று விசாரணை செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  அதே வேளையில், புகார் கொடுக்கப்பட்டது என்பதற்காகவே சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஒரு குற்றவாளியாக சித்தரித்து 'அவன், இவன்' என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவது வேதனை அளிக்கிறது.  சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் இது போன்ற பாலியல் புகார்கள் ஏற்கனவே வந்துள்ளன.  இந்த ஊடகங்கள் அந்தச் செய்திகளை இது போன்று முதன்மைச் செய்தியாக வெளியிடாதது ஏன்? ஆசிரியர்கள் என்றால் அவ்...

ஒரு சாமானிய மனிதனின் கேள்வி.

கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய்த் தொற்று காரணமாக வெளிநாடுகளில் அதிக அளவில் மக்கள் உயிரிழந்தார்கள் என்றார்கள்.   தற்போது நம் நாட்டிலேயே தினமும் ஆயிரக்கணக்கானோர் இறந்துகொண்டு இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. இறந்த மக்களைப் புதைப்பதற்கு இடமில்லாததாலும்,  எரிப்பதற்கு வசதி இல்லாததாலும்  இறந்தவர்களின் உடல்கள் கங்கை ஆற்றில் வீசப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மருத்துவமனையில் இடம் இல்லாததால், மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்னும் செய்திகளும் வந்துகொண்டு இருக்கின்றன.  என் நட்பு வட்டாரங்களில் சிலரை நான் இழந்துவிட்டேன். உறவினர்கள் சிலரையும் இழந்துவிட்டேன். அவர்களை அடக்கம் செய்தது எல்லாம் பொக்லைன் எந்திரங்கள் தான்.  அந்த துக்க நிகழ்வுகளுக்குக் கூட செல்ல முடியாத நிலை இன்று உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது.  இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டும் என்றும், நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூற...

எஸ் ஆர் ரங்கநாதன் விருதுக்கு நூலகர்கள் தேர்வு செய்யப்படுவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்!

ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20-ம் தேதி வரை நாடு முழுவதும் நூலக வார விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சிறப்பாக  ‌பணிபுரியும் நூலகர்களுக்கு நூலகத் துறை சார்பில்  டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் விருது வழங்கி கவுரவிக்கிறது.   இந்த விருது மாவட்டத்திற்கு ஒரு நூலகர் என்று  தேர்வு செய்து சென்னையில் நடைபெறும் விழாவில் கல்வித் துறை அமைச்சர் கையால் வழங்கப்படுவது வழக்கம்.  நூலகர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவது  பற்றிய விமர்சனம் ஆண்டுதோறும் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணம் விருதுக்கு தேர்வு செய்யப்படும் முறையில் வெளிப்படைத் தன்மை இல்லாதது தான்.     எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், மாவட்ட நூலக அலுவலர்கள் இரகசியமாக பரிந்துரை செய்யும் நூலகர்கள் பட்டியலை விழா குழு பரிசீலனை செய்து அறிவிப்பதாக சொல்லப்படுகிறது.  பல மாவட்டங்களில் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சரியான முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்றும், சில மாவட்டங்களில் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், முறையாக  தேர்வு செய்யப்படுவதில்லை என்கின...