அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்
பன்னாட்டு புத்தகத் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தியதன் மூலம் தமிழ்ப் படைப்புகள் உலகறியச் செய்ததுடன் , பல்வேறு மொழிகளிலுள்ள சிறந்த படைப்புகளை மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் சிறப்பாகச் செய்ததற்காக நல்லாளுமை விருது நமது இயக்குநர் திரு. க.இளம்பகவத் அவர்களுக்கு இன்று தமிழக முதல்வர் வழங்கியது , நம் அனைவருக்கும் கிடைத்த விருதாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். திரு. க. இளம்பகவத் அவர்களின் ஆளுமை அசாத்தியமானது. எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னுடைய கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர். எத்துணை இடர்பாடுகள் வந்தாலும் அதைக் கடந்து செல்வதற்கு சில உத்திகளைக் கையாண்டு வருபவர். இவருக்கு எந்தப் பணி வழங்கப்பட்டாலும் , அந்தப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு , தன் கீழ் பணிபுரியும் அனைவரையும் அரவணைத்து , அந்தத் துறையில் முத்திரை பதிப்பவர். இல்லம் தேடிக் கல்வியிலும் , மகளிர் உரிமத் தொகை திட்டத்திலும் இவர் காட்டிய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் ' இளம் ஐஏஎஸ் அலுவலரான இவரை , ஒரு மூத்த ஐஏஎஸ் அலுவலராகப் பார்க்க வைத்தது '. பொது நூலகத்துறை இயக்குநராக திரு. க. அறிவொளி அவர்களுக்குப...