Posts

Showing posts from May, 2022

ஒழுங்கீனமான மாணவர்கள் - தீர்வு என்ன?

அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியரைத் தாக்கும் காட்சியையும், ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டு இருக்கும்போது மாணவர்கள் நடனமாடும் காட்சியையும் தொலைக்காட்சிகளில் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.   இது, மாநிலத்தில் ஏதோ ஒரு பள்ளியில், ஒரு சில மாணவர்களால் நடந்தவை என்று பெரும்பாலோனோர் நினைக்கின்றனர்.  நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் நாளும் நடக்கும் காட்சிகள் இவை. ஆசிரியர்களின் இருசக்கர வாகனத்தின் டயரை ஊசியால் குத்தி பஞ்சர் செய்வதும், இருசக்கர வாகன இருக்கையை பிளேடால் கிழித்து நாசப்படுத்தும் சாதாரண நிகழ்வுகள். வகுப்பறையில் கேள்வி கேட்கும் ஆசிரியரை முறைப்பதும், தரக்குறைவாக பேசுவது சகஜம். ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது நடனமாடுவதும், பாலியல் நோக்கோடு பார்த்து சிரிப்பதும் உச்சக்கட்டம். மாணவர்களிடம் அடி வாங்கும் ஆசிரியர்களும் உண்டு; ஆபாச வார்த்தைகளை வாங்கும் ஆசிரியைகளும் ஒன்று. இவையெல்லாம் வெளியில் சொல்ல முடியாமல் அந்த ஆசிரியர், ஆசிரியை மனதோடு மூடி மறைத்து விடுகின்றனர்.  இவை எதுவும் பத்திரிகைகளில், காட்சி ஊடகங்களில் வெளிவருவது இல்லை. பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வர...

போராடிப் பெற்ற சலுகைகள் காக்கப் பட வேண்டும்.

*சி.சரவணன்*  நூலகர், கடத்தூர். 15 ஆண்டுகளுக்கு முன்பு நூலகப் பணியாளர் கூட்டம், புதிய நூல்கள் நூலகங்களுக்கு எடுத்துச் செல்வது, எஜூசாட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவது  - போன்றவை   வெள்ளிக்கிழமைகளில் தான் நடந்து வந்தன. இதனை எதிர்த்து கேள்வி கேட்க யாரும் இல்லை. அப்பொழுது இருந்த மூத்த நூலகர்களும் மௌனமாகத்தான் இருந்தனர்.  "நூலகர்களுக்கு இருப்பது ஒரு நாள் வார விடுமுறை; அந்த நாளில் இது போன்ற வேலைகள் நூலகர்ளுக்கு வைப்பதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்; அதனால், இது போன்ற வேலைகளை வெள்ளிக்கிழமைகளில் வைக்கக்கூடாது" என்று எஜூசாட் நிகழ்ச்சியில்  இயக்குனருக்கு கோரிக்கை வைத்தேன். அந்த மாதத்தோடு எஜூசாட்  நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அத்துடன், நான் பொது நூலகத் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தபோது,  "வெள்ளிக்கிழமைகளில் நூலகர்களுக்கு எந்தப் பணியையும் வைக்கக்கூடாது"  என்று இயக்குநர் அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.  மேலும், வெள்ளிக்கிழமைகளில் பணியாளர் கூட்டம் என்று அறிவித்த மாவட்ட நூலக அலுவலர்களிடம் பேசி நாள் மாற்றம்...