எளிய வாசகர் - உள்ளம் கவர்ந்த கருத்து.
நேன்று நூலகத்தில் ஒரு நெகழ்ச்சியான சம்பவம் . அதைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா நடைபெற்றது . வழக்கம் போல , ‘நூலகத்தில் அதிக புத்தகங்கள் எடுத்து வாசித்த வாசகர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி ' நடைபெற்றது . பரிசு பெற்ற வாசகர்களுள் ஒருவரான திருமதி தமிழ்ச்செல்வி என்பவர் நேற்று மாலை நூலகத்துக்கு வந்தார் . நூலக விழா சிறப்பாக இருந்தது என்றும் , தனக்கு பரிசு வழங்கப்பட்டதற்கு நன்றி என்றும் கூறினார் . " இது வழக்கமான நிகழ்ச்சிதான் , இதற்கு , எதற்கு நன்றி ?" என்றேன் . " டாக்டர் சந்திரசேகரன் கையால் எனக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சி " என்றார் . " இந்த நன்றியையும் மகிழ்ச்சியும் அன்றே கூறி இருக்கலாம் . ' ஏதாவது பேசுங்கள் ' என்று அழைத்தேன் . நீங்கள் பேச மறுத்து விட்டீர்கள் !" என்றேன் . " கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அதிகம் படித்தவர்கள் என்பதால், எனக்கு பேச தயக்கமாக இருந்தது . இருந்தாலும் ‘என் மனதில் சொல்ல வேண்டும் என்று இருக்கிறதை’ உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று ...