Posts

Showing posts from August, 2022

உயர் நீதிமன்றத் தீர்ப்பு நூலகர்களுக்கு பின்னடைவா? இனி என்ன செய்யலாம்?

வழக்கு விவரம்: 1990, 97, 98, 99, 2000 ஆண்டுகளில் பகுதி நேர, ஊர்ப்புற நூலகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் நாள் மூன்றாம் நிலை நூலகர்களாக பணி ஈர்க்கப்பட்டனர்.   இவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் கொடுத்து இருந்தனர். அதில் "நாங்கள் மூன்றாம் நிலை நூலகர்களாக பணியமற்றப்பட்ட நாளிலிருந்து தான் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, நாங்கள் ஊர்ப்புற நூலகர்களாகப் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு, அந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிந்த நாள் மூன்றாம் நிலை நூலகர்களாக  பணியமர்த்தப்பட்டதாகக்  கருதி, பணிவரன்முறை செய்து, பணப்பலன் உட்பட இதர  சலுகைகள் வழங்க வேண்டும்" என்று கோரி இருந்தனர்.  இந்த வழக்கிற்கு இவர்கள் வைத்த வாதம்: "அரசாணை 156 பள்ளிக்கல்வி (கே 2 ) நாள் 10/ 9/1998ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள். (Guidelines) அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையிலும் இட ஒதுக்கீடு இன சுழற்சி அடிப்படையிலும் முறையான பணிநியமன விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளோம். அதனால், நாங்கள் ப...

ஊர்ப்புற நூலகர்கள் வழக்கு - முழு விவரம்.

Image
("ஊர்ப்புற நூலகர்களுக்கு நீதிமன்ற உத்தரவால் பாதிப்பா?" என்ற தலைப்பில் ஒரு பதிவை நேற்று காலை போட்டேன். மாலை 6 மணிக்குள் அந்த பதிவை 872 பேர் படித்து இருக்கிறார்கள். இதிலிருந்து வழக்கு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள நூலகர்கள் ஆர்வம் காட்டுவது தெரிகிறது. அதனால் வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்களை திரட்டி இந்த பதிவை போடுகிறேன்.)  2015 ஆம் ஆண்டு 19 ஊர்ப்புற நூலகர்கள் "நாங்கள் பகுதி நேர நூலகர்களாக / ஊர்ப்புற நூலகர்களாக பணியில்  சேர்ந்த நாளிலிருந்து பணி வரன்முறை செய்ய வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  அந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. (வழக்கு எண். 8397/ 2015 )  இந்த நிலையில் மேற்படி 19 மனுதாரர்களில் ஒருவரான கே. ஏ. சத்திய நாராயணன் என்பவர் 2022 ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கைத் தொடுத்து, "என்னுடைய கோரிக்கையை சேலம் மாவட்ட நூலக அலுவலர் பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றமும் இவரது கோரிக்கையை பரிசீலனை(consider) செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட நூலக அலுவலருக்கு உத்தரவிட்டத...

ஊர்ப்புற நூலகர்களுக்கு நீதிமன்ற உத்தரவால் பாதிப்பா?

  ஊர்ப்புற நூலகர்களின் பணி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சில கருத்துகளை தெரிவித்துள்ளது. இதைப் படித்த நூலகர்களில் சிலர்  என்னிடம் கருத்து கேட்டனர்.  நீதிமன்ற உத்தரவால் ஊர்ப்புற நூலகர்களின் பணிக்கு பாதிப்பு வருமோ? என்று  நூலகர்கள் சிலர்  தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.  இது தொடர்பாக, என்னுடைய கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.   "தங்களுக்கு பதவி உயர்வு வேண்டும் அல்லது முறையான காலமுறை ஊதியம் வேண்டும்" என்று 19 ஊர்ப்புற நூலகர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் கோரிக்கை பற்றிய முழு விவரம் எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் வழக்கின் போக்கை வைத்துப் பார்த்தால் இவர்கள் கோரிக்கை என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வழக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக நடப்பதால் வழக்கு தொடுத்தவர்களில் சிலர் இந்த வழக்கையே மறந்து விட்டனர். இந்த வழக்கில் உள்ள நூலகர் ஒருவரிடம் பேசினேன். இந்த வழக்கு பற்றி ஒன்றும் தெரியாது என்றார்.   இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்...