புத்தகத் திருவிழாக்களில் நூலகர்கள் ஒதுங்கி இருப்பது ஏன்?
மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்றும் அதற்கு 4.96 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்று தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது. அறிவிப்பு வெளியான அன்றே, தகடூர் புத்தகப் பேரவைத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் அவர்கள் தமிழக முதல்வரின் தனிச்செயலாளர் திரு த. உதயசந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார். "ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகின்றன; தமிழக அரசு தனியாக புத்தகத் திருவிழாவை நடத்துவதை விட மேற்படி அமைப்புகளுடன் இணைந்து புத்தகத் திருவிழாக்களை நடத்துவது சிறப்பாக இருக்கும்" என்று கருத்து தெரிவித்தார். "அவ்வாறு செய்யலாம்" என்று பதில் அளித்தார் திரு. த. உதயசந்திரன் அவர்கள். (திரு த. உதயசந்திரன் 2019 ஆம் ஆண்டு தர்மபுரி புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது) இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி திவ்யதர்ஷினி அவர்களை புத்தகப் பேரவை நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, மாவட்ட நிர்வாகமும் தகடூர் புத்தகப் பேரவையும் ...