Posts

Showing posts from December, 2020

மெல்ல மெல்ல தமிழ் இனி வாழும்.

Image
( இளந்தமிழர் பேரவைை- நடத்திய பன்னாட்டுக் கலைத் திருவிழா போட்டிகளில் 18 முதல் 30 வயதினருக்கான கட்டுரைப் போட்டியில் எங்கள் மகள் ச.கோவரசி எழுதிய *' மெல்ல மெல்ல தமிழ் இனி வாழும்' இந்தக் கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.) மெல்ல மெல்ல தமிழ் இனி வாழும். ச.கோவரசி,  (த/பெ. சி.சரவணன்) மூன்றாம் ஆண்டு - இளநிலை வேளாண்மை வாணவராயர் வேளாண்மை கல்லூரி _ பொள்ளாச்சி, வீட்டு முகவரி : 1/47 பி, இந்திரா நகர், கடத்தூர், தருமபுரி- 6353 03 முன்னுரை : மெல்ல தமிழினிச் சாகும் – என சொல்லக் கேட்கும் மனங்கள் வேகும். அவ்வாறு வெந்து போகின்ற மனங்களில் என் மனமும் ஒன்று. பல்வேறு காலங்களிலும் பல்வேறு இடர்களிலும் நாம் எண்ணிலடங்காதவற்றை இழந்திருக்கிறோம். அவை அனைத்தையும் தாண்டி நின்ற தமிழ் தம்முள் பல்வேறு இழப்புகளையும் சந்தித்திருக்கிறது. ஒரு குடிசை எரிந்து விட்டால் ஓர் ஊரே அழிந்துவிடும் எனச் சொல்வது ஏற்கத்தக்கது அன்று. அவ்வாறு தான் தமிழும். வெல்லும் தமிழ், இனி எவ்வாறு மெல்ல மெல்ல வாழும் என்பதைக் காண்போம். பொய் என்னும் காட்டுத் தீ  எதிர்மறையான கருத்துகளைப் பேசியே பழக்கப்பட்டு விட்ட சமூகம் இது. அவ்வாறு தான் தமிழ் ...