தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பதிப்பாளர்கள் - படைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம்
தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்ட பதிப்பாளர்கள் - படைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று 23.9.2018 ஞாயிற்றுக்கிழமை தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வாசிப்பை நேசிப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர் நூலகர் சி.சரவணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தகடூர் புத்தகப் பேரவை தலைவர் சிசுபாலன் , நாகை பாலு , மலர்வண்ணன் , தகடூர் தமிழ்கதிர் , வாழ்வியல் முன்னேற்றம் ஆசிரியர் நாகராஜன் , சுதாகரன் , இராசகுமாரன் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக திருவள்ளுவர் புத்தக இல்லம் அறிவுடைநம்பி வரவேற்றார். முடிவில் நூலகர் தீ. சண்முகம் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட பதிப்பாளர் , படைப்பாளர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்குவது. இதன் ஒருங்கிணைப்பாளராக நூலகர் சி.சரவணன் செயல்பாடுவது. 2. மாவட்டத்தில் செயல்படுகின்ற அனைத்து இலக்கிய அமைப்புகள் , தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடந்துவது. இதனையொட்டி அரூர் பென்னாகரம் , கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தனி கூட்டங்கள் நடத்துவது. ...