Posts

Showing posts from April, 2024

நூலகங்களுக்கான பருவ இதழ்கள் ஆன்லைன் பதிவேற்றமும், நடைமுறைச் சிக்கல்களும்

Image
      ‘நூலகங்களுக்கு நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் கொள்முதல் செய்யும் பொழுது வெளிப்படைத் தன்மை வேண்டும், வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ற அவை வாங்கப்பட வேண்டும்’ என்பது நீண்டகால விவாதப் பொருளாக இருந்தது.     இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அதுதான் வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கை, 2024. இதன்படி, இனி நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்கள் மட்டுமல்லாது, பருவ இதழ்களும் வாசகர்களின் கருத்தறிந்து நூலகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்பதாகும்.     இதன் தொடக்கமாக, கடந்த வாரம் பொது நூலக இயக்குநர் அவர்களின் அறிவிப்பு அமைந்தது. வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பருவ இதழ்கள் பற்றிய பதிவேடு ஒன்று நூலகங்களில் உடனடியாக பராமரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நகர்ப்புற நூலகங்களில் இந்த பதிவேடு பராமரிக்கப்பட்டு, வாசகர்கள் தங்கள் விருப்பமான  பத்திரிகைகளை எழுதி வைத்தனர்.     அடுத்த ஓரிரு நாட்களில், பொது நூலக இணையதளத்தில் நூலகங்களுக்கான பருவ இதழ்கள் பதிவேற்றம் செய்யும் portal தொடங்கப்பட்டது. இந்த போர்டலில் நூலகர்கள், வாசகர் வட்டத்...

'வாசகர் வட்டம்' - சிறப்பாக செயல்பட...

இன்றைக்கு அனைத்து நூலகங்களிலும் வாசகர் வட்டம் இருக்க வேண்டியது அவசியம் என்னும் நிலைமை உருவாகிவிட்டது . வெளிப்படையான நூல் கொள்முதல் திட்டத்தின்படி , நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்கள் மட்டுமல்லாது , பருவ இதழ்களும் வாசகர்களின் விருப்பம் அறிந்து வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பான   பொது நூலக இயக்குநர் அவர்கள் அறிவிப்புகளில் வாசகர் வட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு நூலகத்திற்கும் ஒதுக்கப்படும் நிதிக்கு ஏற்ப நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் வாங்க வாசகர் வட்டத்தின் தீர்மானம் அவசியம் என்றும் , தீர்மானத்தின் நகல் நூல் கொள்முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது ஏதோ புதிய நடைமுறை என்று பல நூலகர்கள் சொல்கிறார்கள் . கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் புத்தகங்கள் / பருவங்கள் வாங்குவதை நூலகர்கள் தான் முடிவு செய்கிறார்கள் .  நூலகங்களை இயக்குபவர்களாக மட்டும் இருந்து வந்த பொது நூலகத்துறை நூலகர்களுக்கு நிர்வாகத்தில் பங்குபெறும...

வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் திட்டத்தில் நூலகர்களின் பங்கு.

சி.சரவணன், மூன்றாம் நிலை நூலகர், கிளை நூலகம் , கடத்தூர் , தருமபுரி மாவட்டம் , ( 8668192839)  நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் புத்தகங்கள் இனி வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணையையும் வெளியிட்டு இருக்கிறது. இதனை வடிவமைக்க பொது நூலகத்துறை இயக்குநர் திரு க. இளம்பகவத் அவர்கள்  பெரும் முயற்சி எடுத்துள்ளார்.   பதிப்பாளர்கள், வாசகர்கள், புத்தக விற்பனையாளர்கள், புத்தக ஆர்வளர்கள் என்று பல்வேறு தரப்பினர் இந்தத் திட்டத்திற்கு வரவேற்பும் பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.  சிறப்பு மிக்க இந்தத் திட்டத்தைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்:      நூலகங்களுக்கான புத்தகங்கள் தேர்வு செய்வதற்கு என்று ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் பல துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற்று இருப்பர். இந்தக் குழு ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். நூலகங்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்ய விரும்பும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் இதற்கான இணைய தளத்தில்  பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தின் 20 - 25 பக்கங்கள் இதற்கான ...