மாணவிகளுக்கு நடைபெறும் திருமணங்கள் - அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?
தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீண்ட காலமாக 18 வயது நிறைவடையாத பள்ளி மாணவிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஓராண்டாகப் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதில்லை. இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு அங்கொன்றும், இங்கொன்றும் எனத் திருமணங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளில் 7 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பல மாணவிகளுக்கு திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. 18 வயது நிறைவடையாத பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அனைவரும் அறிவர். அப்படி இருந்தும் கிராமங்களில் சிறுமிகளுக்குத் திருமணங்கள் நடந்து வருவது தொடர்கிறது. இதுபோன்ற திருமணங்கள் மண்டபங்களிலோ, வீடுகளிலோ நடைபெறுவதில்லை. பெரும்பாலும் கோவில்களில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடைபெறுகின்றன. கோவில் நிர்வாகத்துக்கும், பூசாரிக்கும் இளம் வயது திருமணம் தவறு என்ற...