Posts

Showing posts from May, 2020

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும்.

அரசு ஊழியர் பணி ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.  ஓய்வு பெறும் வயது ஓராண்டு உயர்த்தப்படுவதாகக் கூறும் அரசாணையில், அதிகபட்ச பணி ஆண்டுகள் பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை.  இது தான் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்று சிலர் கூறுவதற்குக் காரணம். இந்த ஆண்டு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற இருப்பதால் அவர்களுக்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என்பதாலும்,  கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்க இயலாது என்பதாலும் அரசு இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எது எப்படி இருப்பினும்,  பங்களிப்பு ஊதியத் திட்டத்தில் (CPS) இருக்கும்  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இந்த அறிவிப்பை வரவேற்கின்றனர்.    ஏப்ரல் 2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று அரசு அறிவித்து விட்டது.  இந்த நிலையில் 2003க்குப் பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு பெற...