Posts

Showing posts from April, 2018

நூலகங்களின் சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம்

Image
Saravanan.C மாறிவரும் பரிமாணங்களில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நூலகங்களின் சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் Need to improve the services of Tamil Nadu public libraries in changing dimensions சுருக்கம் (Abstract): வளர்ந்துவரும் இன்றைய உயர் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சூழலுக்கு ஏற்ப , பொது நூலகங்கள் தங்கள் மேலாண்மையையும் , சேவைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.   அந்த வகையில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நூலகங்களின் சேவைகளையும் ,   அங்குப் பணிபுரியும் நூலகர்களின் பணிகளையும் மறுஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.                 இந்த ஆய்வறிக்கையின் சிறப்பம்சம் என்னவென்றால் , வளர்ந்து வரும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும் , வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் , தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் இயங்கும் பொது நூலகங்களில் கொண்டுவரப்படவேண்டிய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக விவாதிப்பதாகும். இன்றைய உயர் தொழில்நுட்...