Posts

Showing posts from 2023

ஜெயகாந்தனின் 'பிரளயம்' என்ன சொல்கிறது?

Image
     எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய பிரளயம் என்னும் இந்த நூலை கடந்த வாரம் வாசித்தேன் . இந்தக் கதையில் , சென்னையில் ஆற்றங்கரை ஓரமாக குடிசைகள் போட்டு வாழ்ந்து வரும் கீழ்த்தட்டு மக்களின் சராசரி வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டுகிறார் ஜெயகாந்தன் . கதையின் நாயகி பாப்பாத்தி , அழகப்பர் வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்கிறாள் .  அழகப்பர் மகன் செல்வத்துடன்  நெருக்கமாக இருக்கிறாள் .  அவளுக்கும்  ரிக்ஷா ஒட்டும் தீனனுக்கும் திருமணம் நடைபெறுகிறது .  திருமணம் முடிந்த அடுத்த நாள் வழக்கம்போல, அழகப்பர் வீட்டிற்கு வேலை க்கு ப் போகிறாள் .  செல்வத்தைச் சந்தித்து , " உங்களுக்குத் திருமணம் நடைபெறும் வரை நான் இங்கு வேலைக்கு வரமாட்டேன் " என்று கூறிவிட்டு வந்து விடுகிறாள் . பக்கிரி ஜெயிலுக்கு போய் மூன்று வருடம் கழித்து வருகிறான் . தன் மனைவி பச்சியம்மாளும்  குழந்தையும் சாப்பாட்டுக்கு என்ன செய்திருப்பார்களோ என்று வேதனைப்படுகிறான் . இவன் மனைவி மாணிக்கத்தோடு வாழ்வதாகக் கேள்விப்படுகிறான் ....

சாதி வாரி கணக்கெடுப்பு – மக்களை முட்டாள் ஆக்கும் வேலையா?

       பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, முடிவுகளை வெளியிட்டார் அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புள்ளி விவரங்களின்படி , அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36.01 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.12 சதவீதமும், பட்டியல் இனத்தினர் 19.65 சதவீதமும், இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 15.52 சதவீதமும், பட்டியல் பழங்குடியின மக்கள் 1.68 சதவீதமும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.      இந்த கணக்கைப் பார்த்தால், பழைய கணக்கின் சதவிகிதம் சில மாறி இருக்கிறது அவ்வளவுதான். இந்த சதவிகிதத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடப்போவதாக கூறுகிறார் நிதிஷ்குமார்.      பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ், நிதீஷ்குமார் ஆகியோர் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக பிகாரில் ஆட்சி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  இந்த 33 ஆண்டுகளில் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை லாலுவும் திதிஷ்குமாரும் ஏன் மேம்...

எளிய வாசகர் - உள்ளம் கவர்ந்த கருத்து.

Image
நேன்று நூலகத்தில் ஒரு நெகழ்ச்சியான சம்பவம் . அதைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .   கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா நடைபெற்றது . வழக்கம் போல , ‘நூலகத்தில் அதிக புத்தகங்கள் எடுத்து வாசித்த வாசகர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி ' நடைபெற்றது . பரிசு பெற்ற வாசகர்களுள் ஒருவரான திருமதி தமிழ்ச்செல்வி என்பவர் நேற்று மாலை நூலகத்துக்கு வந்தார் . நூலக விழா சிறப்பாக இருந்தது என்றும் , தனக்கு பரிசு வழங்கப்பட்டதற்கு நன்றி என்றும் கூறினார் .  " இது வழக்கமான நிகழ்ச்சிதான் , இதற்கு , எதற்கு நன்றி ?" என்றேன் .  " டாக்டர் சந்திரசேகரன் கையால் எனக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சி " என்றார் . " இந்த நன்றியையும் மகிழ்ச்சியும் அன்றே கூறி இருக்கலாம் . ' ஏதாவது பேசுங்கள் ' என்று அழைத்தேன் . நீங்கள் பேச மறுத்து விட்டீர்கள் !" என்றேன் . " கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அதிகம் படித்தவர்கள் என்பதால், எனக்கு பேச தயக்கமாக இருந்தது . இருந்தாலும் ‘என் மனதில் சொல்ல வேண்டும் என்று இருக்கிறதை’ உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று ...

நூலக வார விழா பற்றி - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

நூலக மனிதர்கள் - நீண்டகால வாசகர் (எழுத்தாளர்  எஸ். ராமகிருஷ்ணன் ) நூலகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை விழா நடப்பது வழக்கம். அந்த நாளில் சிறப்புரைக்காகத் தமிழ் அறிஞர்கள் எவரையாவது அழைப்பார்கள். அன்று புத்தக அறிமுகம் செய்து வைக்கும் சிற்றுரைகளும் நடைபெறும். நூலகப்பணியாளர்கள் மற்றும் புரவலர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அப்படி ஒரு விழா நடக்கும் போது நீண்டகால வாசகர் ஒருவருக்குப் பாராட்டுச் செய்யலாம் என்ற யோசனையைச் சொன்னேன். நூலகர் அதை உடனே ஏற்றுக் கொண்டார். எந்த ஆண்டு முதல் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதுடன் எவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து நூலகத்திற்கு வருகை தருகிறார்கள் என்பதையும் வைத்து இருவரை நூலகர் தேர்வு செய்திருந்தார். அவர்களில் ஒருவர் உடல்நலமில்லை எனவே கலந்து கொள்ள இயலாது என்றார். ஆகவே ரத்தினசாமி என்ற நீண்டகால வாசகருக்குப் பாராட்டு விழா நடத்துவது என்று முடிவு செய்தார்கள். இதைப்பற்றி ரத்தினசாமியிடம் சொன்னபோது “அதெல்லாம் எதுக்கு“ என்று மறுத்தார். “நாற்பது வருஷமா லைப்ரரிக்கு வந்துட்டு இருக்கீங்க. இது சாதாரண விஷயமில்லை சார். உங்களை கௌரவப்படுத்துவது எங்களுக்குப் பெருமை“ என்றார் நூலகர் ரத்தினசாமி ...