நகைச்சுவை தொடர்: 1. கைப்பேசி

C.Saravanan 


   கைப்பேசி தொலைந்து போனால் புதியதாக வாங்கிக்கொள்ள முடியும்.  ஆனால், அதில் உள்ள தொடர்பு எண்களை எப்படி மீட்க முடியும்மனைவியின் கைப்பேசி எண்ணைக்கூட நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லையே! 
  கைப்பேசியைத் தொலைத்தவர்கள் படும் பாட்டைப் பார்த்தால் தெரியும், அதன் பாதிப்பு என்னவென்று. அதனால், வெளியூர் பயணத்தின் போது கைப்பேசியை யாராவது எடுத்து விடுவார்களோ என்று சட்டைப் பையை அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பது என் வழக்கம்.  இது எனக்கு ஒரு அனிச்சைச்  செயல் போல் ஆகிவிட்டது. இன்றும் இப்பழக்கம் தொடர்கிறது.
   எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்யும்போது, வழக்கம்போல சட்டைப் பையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.  என் அருகில் அமர்ந்தவர் ஒரு நிறுத்தத்தில் இறங்கியதால், நடுத்தர வயதுடைய பெண் ஒருத்தி என் அருகில் அமர்ந்தாள்.
  என்னைப்போல் அவளும் அவ்வப்போது அவளுடைய ஜாக்கெட்டைத் தொட்டுத் தொட்டுப் பார்த்த்துக் கொண்டே இருந்தாள். என்னுடைய செய்கையைக் கிண்டல் செய்ய இப்படி செய்கிறாளோ என்று எனக்கு சந்தேகம் வந்தது. 
  நீண்ட நேரப் பயணம் என்பதால் அவள் செய்கையை கவனித்துக் கொண்டே இருந்தேன்.  அடிக்கடி ஜாக்கட்டைத் தொட்டுப் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.  பேருந்து நிரம்பியிருந்ததால் என்னால் வேறு இருக்கைக்கு மாற முடியவில்லை.  பிறகு பொறுமையை இழந்த நான், அவளிடம் கேட்டேன். 
   “ஏம்மா, நான்தான் செல்போன் இருக்குதான்னு தொட்டுத் தொட்டுப் பார்க்கிறேன்.  நீங்களும் என்னை மாதிறியே செய்யறீங்களே? என்றேன். 
   அதற்கு அவள், ஏங்க சார், ஆம்பளங்க போன்தான் திருடு போகும், பொம்பளங்க போன் திருடு போகாதா? என்றாள்.
    “ஏம்மா, உங்க போன் ஏதாவது திருடு போயிடுச்சா? என்றேன்.
     “ஆமாங்கபோன வாரம் இதே பஸ்ல ஒருத்தன் என் போனை எடுத்துட்டான் என்று வருத்தமாகச் சொன்னாள்.
  இதைக்கேட்ட நான் ஆடிப் போயிட்டேன்.  "இவ்வளவு பத்திரமான இடத்தில் இருக்கிற போனை ஒருத்தன் எடுக்கறான்னா, நம் பாக்கட் எம்மாத்திரம்? என்று எண்ணியவாறு என் கைப்பேசியை எடுத்து உள் சட்டைப் பையில் வைத்துவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தேன்.
   “ஏம்மா, யாராவது பொம்பளைங்கதான் எடுத்திருப்பாங்க, ஆம்பளைங்களுக்கு அவ்வளவு தைரியம் வராது என்றேன்.
        “இல்லைங்க சார், ஆப்பளத்தான் எடுத்தான் என்றாள்.
   “சரி, அவன் கைய விட்டு எடுக்கறவரைக்கும் அப்படி என்னதான் செஞ்சினு இருந்தீங்க? என்றேன்.
     “அவன் செல்போனை எடுக்கத்தான் கையை விடறான்னு எனக்கு எப்படி தெரியும்? என்று சிரித்தாள்.
   இதைக்கேட்ட என்னால் வீடு போய்ச் சேரும் வரை சிரிப்பை அடக்க முடியவில்லை. 

Comments