ஏன் இந்த தலைக்குனிவு?
திருப்புரம்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு, இரண்டு நீதிபதிகள் தீர்ப்போடு அநேகமாக முடிந்து விட்டது என்று சொல்லலாம். இருந்தாலும், “நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவற்றவில்லை?” என்று கேள்வி எழுப்பி மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மூலம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். இவர்கள் இருவரும் மாவட்ட நிர்வாகம் முழுவதையும், தங்கள் கைகளில் வைத்திருக்கும் ஏகபோக அதிகாரம் கொண்டவர்கள். இவர்கள் தலைகுனிந்து நீதிமன்ற படிகள் ஏறுவதைப் பார்க்கும்போது நமக்கு வேதனையாக இருக்கிறது. “நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை?” என்ற நீதிபதியின் கேள்விக்கு இவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. பிப்ரவரி 2ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் இவர்கள் பதில் மனு தாக்கல் செய்தாக வேண்டும். இவர்களை எச்சரித்து அல்லது மன்னித்து இந்த வழக்கை முடித்து வைத்து விடலாம். ஆனால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இவர்களை விடுவதாக தெரியவில்லை. இதை பலரும் அரசியலாக பார்க்கிறார்கள். நீதி...