சாரு நிவேதிதா அவர்களின் வேற்றுலக வாசியின் டைரிக் குறிப்புகள் நூல் பற்றி...
சாரு நிவேதிதா ஐயா அவர்களுக்கு, வணக்கம். தங்களின் வேற்றுலகவாசியின் டைரிக்குறிப்புகள் என்னும் நூலைப் படித்தேன். அருமை. மிக்க மகிழ்ச்சி. இந்த நூலின் வாசகன் என்ற வகையில் சில கருத்துக்களை தங்கள் பார்வைக்கு வைக்கவும், சில கேள்விகளை எழுப்பவும் விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் புதிய தலைமுறை வார இதழில் வெளிவந்தவை. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த கட்டுரைகளில் பலவற்றை அப்பொழுதே படித்திருக்கிறேன். அப்பொழுது படிக்க வாய்ப்பு கிடைக்காத சில கட்டுரைகள் தற்பொழுது படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நூலில் தாங்கள் குறிப்பிட்டுள்ள 26 கட்டுரைகளில் பெரும்பாலானவை என் நெஞ்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பல்வேறு எண்ணங்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. இந்தக் கட்டுரைகளில் தாங்கள் பதிவு செய்துள்ளவை பற்றி என் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை தங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். பல கட்டுரைகளில் மகாத்மா காந்தியின் போதனைகளையும் அவருடைய வாழ்க்கை நெறிகளையும் அனுபவங்களையும் சிறப்பாக குறிப்பிட்டுள்ளீர்கள்...