நகைச்சுவைத் தொடர்: 7.வித்தியாசமாகச் சிந்திக்கும் குழந்தைகள்

(தமிழச்சி, 2010 டிசம்பர் 

Saravanan. C

இதழில் வெளிவந்த 
எனது கட்டுரை)

  பொதுவாகக் குழந்தைகள் கள்ளம் கபடமில்லாதவர்கள். அவர்கள் சிந்தனையும் அப்படியேதான் இருக்கிறது. குழந்தைகளிடம் பழகுவது என்பது ஓர் அலாதியான அனுபவம். எப்படிப்பட்ட மன உளைச்சலில் இருப்பவர்கூடக் குழந்தைகளிடம் பழகும்போது அவரது மனச்சுமை குறைந்து விடுகிறது. அதனால்தான், குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள்.
   நான் சுயநிதிப் பள்ளி நடத்திவந்த நாட்களில் எனக்கு ஏற்பட்ட சில நகைச்சுவையான அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
     ஒரு நாள், ஒவ்வொரு வகுப்பாகப் பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். அது முதலாம் வகுப்பு. அந்த வகுப்பு ஆசிரியை தமிழ் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு மாணவனை அழைத்து ஒரு கேள்வி கேட்டேன்.
        ‘கண்’ -க்கு எத்தனை சுழி ன் என்றேன்.
  அந்த மாணவன் அமைதியாகவே இருந்தான். நான் கேட்ட வேள்வி அவனுக்குப் புரியவில்லை என்று நினைத்து, அவனுக்குப் புரியும்படி விளக்கமாகக் கேட்டேன்:
       “சண்டை -க்கு மூன்று சுழி ன்’-வரும், தென்னைக்கு இரண்டு சுழி ன்- வரும். கண்’ -னுக்கு எத்தனை சுழி ன்வரும்?என்றேன்.
அவனிடமிருந்து உடனே பதில் வந்தது:
         “ஒரு சுழி ன்என்றான்.
அந்தப் பதிலைக் கேட்ட எனக்குச் சிரிப்புதான் வந்தது, கோபம் வரவில்லை. சில மாணவர்கள் சிரித்தனர்.
       “எப்படிச் சரியாச் சொல்லறே?என்றேன்.
    “சண்டைக்கு மூன்று சுழி ன், தென்னைக்கு இரண்டு சுழி ன் என்றால், அடுத்தது ஒரு சுழி ன்தானே வரும்என்றான்.
     வேறு ஒரு நாள் ஒரு மாணவியை அழைத்து, “வண்டுக்கு இரண்டு சுழி ன் வருமா, மூன்று சுழி ன் வருமா?” என்று கேட்டேன். அவள் ஒரு கணம் கூட யோசிக்காமல் உடனே பதில் சொன்னாள்:
      “சின்ன வண்டா இருந்தா இரண்டு சுழி ன்’, பெரிய வண்டா இருந்தா மூனு சுழி ன்’ வரும்”, என்றாள்.
  அவர்கள் சொன்னது தவறான பதில்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுடைய சிந்தனை எப்படி இருந்தது என்று வியந்தேன். இதைத் தான் ஆங்கிலத்தில் லாஜிக் என்கின்றோம். ஆக, லாஜிக்காகச் சிந்திப்பதில் குழந்தைகள் வல்லவர்கள்.
    இப்படி இன்னும் பல அனுபவங்களைச் சொல்லலாம். ஒரு நாள், ஒரு குழந்தையை எல்.கே.ஜி.யில் சேர்க்க அவனுடைய தாயார் வந்தார். சேர்க்கை முடிந்தது.
    “இவனுக்கு .பி,சி,டி,... தெரியும். கேட்டுப் பாருங்கள்என்றாள் அவன் தாயார். நான் கேட்காமல் இருந்தால் அவள் மனம் புண்படும் என்று நினைத்து அந்தக் குழந்தையை அழைத்துக் கேட்டேன்:
         “.பி,சி,டி,... தெரியுமா?” என்றேன்.
         “தெரியும், பார்க்காமலே சொல்லுவேன்என்றான்.
         “சரி, சொல் கேட்கிறேன்என்றேன்.
     “ஸ்மால் ,பி,சி,டி,... சொல்லட்டுமா? கேப்பிடல் ,பி,சி,டி, சொல்லட்டுமா?” என்றான்.
  ஏ,பி,சி,டி,- என்கின்ற எழுத்துக்கள் பொதுவானவை. எழுதுவதற்கு வேண்டுமானால் வேறுபட்டு இருக்கும். ஆனால், உச்சரிப்பு எல்லாம் ஒன்றுதான்.
     குழந்தைகள் தங்கள் கண்களால் பார்த்த எழுத்து உருவங்களை அப்படியே மனக் கண்களில் பதிய வைத்து, அதை அப்படியே சொல்ல முற்படுகின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது வியப்பாக உள்ளதல்லவா?
    வேறு ஒரு நாள், ஒரு வகுப்பறைக்குச் சென்றேன். அது மூன்றாம் வகுப்பு.
காப்பிக்கும், டீக்கும் என்ன வித்தியாசம் என்று யாருக்காவது தெரியுமா?” என்று பொதுவாகக் கேட்டேன்.
     ஒரு பையன் எழுந்து தெரியும், சார்என்றான்.
          “சரி, சொல்என்றேன்.
       “எங்க அப்பா போட்டா அது டீ. எங்க அம்மா போட்டா அது காப்பி, சார்என்றான். நான் உட்பட அனைத்து மாணவர்களும் சிரித்தனர்.
    உடனே, வேறு ஒரு மாணவி எழுந்து, “சார், நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்றாள்.
        “டீ- யில் ஓர் இருக்கும், காப்பியில் இரண்டு இருக்கும்என்றாள்.
         “எப்படி?” என்றேன்.
     கரும்பலகையில் tea, coffee என்று எழுதி,  இங்க பாருங்க சார், tea - ஒரு e தான் இருக்குது. coffee  இரண்டு e இருக்குதுஎன்று காண்பித்தாள்குழந்கைகள் எவ்வளவு அறிவுக் கூர்மையாக இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இது போன்ற அனுபவங்களை எல்லாம் எழுதினால் அது கட்டுரையாக இருக்காது, புத்தகமாகவே ஆகிவிடும். நன்றி.

இக்கட்டுரையின் அடியில் உள்ள comment தொட்டால் ஒரு கட்டம் வரும் அதில் இக்கட்டுரை தொடர்பான உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நன்றி. 

Comments