நகைச்சுவைத் தொடர்: 4.செருப்பு


    

   ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், பழுதான என்னுடைய செருப்பைத் தைக்க பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்றேன். 
       
     அங்கு செருப்பு தைக்கும் தொழிலாளிக்கும், செருப்பு தைக்க வந்தவருக்கும் வாக்கு வாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 
  
  இருவரையும் சாமாதானப்படுத்தி, பிரச்சனைக்கான காரணத்தைக் கேட்டேன். 
           செருப்பு தைப்பவர், “அவரிடமே கேளுங்க, சார்என்றார்.
          “என்ன பிரச்சனை?” என்று செருப்பு தைக்க வந்தவரிடம் கேட்டேன்.
    அதற்கு அவர் செருப்பு தைக்கக் கொடுத்தேன். என்னுடைய செருப்பு தைத்துக் கொண்டிருக்கும்போது, வேகமாக வந்த கண்டக்கடர் ஒருவர், ‘இந்தப் பையை சீக்கரம் தைத்குக் கொடு, பஸ்ஸ÷க்கு நேரமாச்சுஎன்றார். நானும், கண்டக்டர் பையை முதல்ல தைத்துக் கொடுத்துடு என்றேன். என் செருப்பை வைத்துவிட்டு, அவர் பையை வாங்கித் தைத்தார். யோ, நல்லா தையா, இல்லனா பை பிஞ்சுடும்என்றார் கண்டக்கடர்.  நல்லாதான் சாமி தைக்கிறேன்என்று பணிவாக தைத்துக் கொடுத்தார். நானும் நல்லத் தைக்கச் சொன்னேன்.  அதுக்குப் போய் கோவப்படுகிறார்என்றார்.
       செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் நான் கேட்டேன், “அவர் சொன்னதுல என்ன தப்பு? கஸ்டமர் கிட்ட கோவப்பட்டா எப்படி? பார்க்கறவங்க உன்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?”  என்றேன்.
        அதற்கு செருப்பு தைக்க வந்தவர் சொன்னார், “சார், நீங்க சரியாக் கேட்டீங்க. கண்டக்டர் பையில பணம் இருக்குதுனு பணிவா பேசறார், என் கிட்ட ஒன்னுமில்லனு கோவப்படுறார்?” என்றார்.
          “சரி, சரி பேச்சை வளர்காதிங்கஎன்றேன். இருவரும் அமைதியானார்கள்.
கேட்ட காசைக் கொடுத்துவிட்டு செருப்பை வாங்கிச் சென்றார்.
   பிறகு, என் செருப்பை தைக்க ஆரம்பித்தார். அப்பொழுதும் ஏதோ முனுமுனுத்துக் கொண்டே இருந்தார். 
    “ஏன் இன்னும் உங்க கோபம் ஆறலயா? சின்ன விசயத்துக்கெல்லாம் கோவப்பட்டால் எப்படி?” என்றேன்.
      “சார், அவன் கேட்டது தப்பில்ல, ஆனா, கேட்ட விதம்தான் தப்புஎன்றார் செருப்பு தைக்கும் தொழிலாளி.
         “எப்படி என்ன கேட்டான்?” என்றேன். 
       “யோ, நல்லாத் தைய்யா, இல்லனா செருப்பு பிஞ்சிடும் என்று அழுத்தமாச் சொன்னான், அதனாலதான் சார் எனக்கு கோவம் வந்துடுச்சுஎன்றார்.
     இதைக் கேட்டு அதிர்ந்து போன நான், “அவனை ஏன்  உதைக்காம விட்ட?”  என்றேன்.



Comments