ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 9. டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நல்நூலகர் விருது என்று அரசாணை பெற்றுத்தந்தது:

இயக்குநர் முனைவர் க.அறிவொளி அவர்களுடன். உடன் திரு.எம்.ஜி.செல்வம் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள். 


இயக்குநர் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்தது:
  நூலகத்துறையில் உள்ள பிரச்சனைகளை நூலகர் குரலில் தொடர்ந்து கட்டுரைகளாக எழுதி வந்தேன். 2011 øலை மாதக் கடைசி வாரத்தில் மாலை 6 மணியளவில் கைபேசியிலிருந்து அழைப்பு வந்ததுநூலக நண்பர்கள் அழைக்கிறார்கள் என்று நினைத்தேன்.
சரவணனா?”
ஆமாம், நான்தான், நீங்க?”  என்றேன்.
அறிவொளி பேசறேன்என்றார்.
தயக்கத்தில் அமைதியாக இருந்தேன்.
டைரக்டர் அறிவொளி பேசறேன்என்றார்.
சார், சொல்லுங்க சார்என்றேன்.
நூலகர் குரலில் உனது எதிரும் புதிரும் கட்டுரை படித்தேன். நல்லா எழுதியிருக்கிற, நூலகர்களுக்கும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் உள்ள பிரச்சனையை நடுநிலையோடு எழுதியிருக்கிற, அதுக்குப் பாராட்டு சொல்லதான் போன் போட்டேன்என்றார்.
  இயக்குநர் மகிழுந்தில் வீட்டிற்குச் செல்வதாகவும் எனது கட்டுரையை அப்பொழுதுதான் படித்ததாகவும், படித்த உடனே தொடர்பு கொண்டதாகவும் கூறினார்.
  மேலும், நூலகர் குரலில் வரும் எனது கட்டுரைகளை அவர் தொடர்ந்து படிப்பதாகவும், கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி எனது கட்டுரைகள் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினார்.
 “வேறு பத்திரிகைகளுக்கு எழுதுகிறாயா?” என்று விசாரித்தார். சிற்றிதழ்களுக்கு எழுதுவதாகச் சொன்னேன். பெரிய பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்லி வாழ்த்து தெரிவித்தார். எனக்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்த இயக்குநருக்கு நன்றி கூறினேன்.
வழக்கமாக என்னுடைய கட்டுரைகளின் அடியில் தொடர்புக்கு என்று என்னுடைய கைப்பேசி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிடுவது வழக்கம். இயக்குநர் அந்த எண்ணைப் பார்த்து, உடனே தொடர்பு கொண்டுள்ளார் என்று புரிந்து கொண்டேன்.
  வெளி மாவட்டங்களிலிருந்து எனது கட்டுரையைப் படித்து நூலகர்கள் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். பொதுவாக மாவட்ட நூலக அலுவலர்கள் தொடர்பு கொண்டு எனது கட்டுரைகள் பற்றிப் பேசுவதில்லை. அது அவர்களுக்குக் கௌரவக் குறைச்சலாகக்கூட இருக்கலாம். ஆனால், அவர்களால் படிக்காமல் இருக்க முடியாது. நிலைமை அப்படி இருக்க, இயக்குநர், துறைத் தலைவர் - என்று எவ்வளவோ பணிகளுக்கு இடையே எனது கட்டுரைகளைத் தொடர்ந்து படித்துவருவதாகச் சொன்னதும், என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டு தெரிவித்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்தது. அது என் எழுத்துக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகக் கருதினேன்அத்துடன் பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுமாறு இயக்குநர் ஊக்கப்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நல்நூலகர் விருது என்று அரசாணை பெற்றுத்தந்தது:
  இயக்குநர் பெரிய பத்திரிகைகளுக்கு எழுதச் சொன்னார். பெரிய பத்திரிகை என்றால் தினமணியில்தான் வாரத்திற்கு 6 நாட்கள் கட்டுரைகள் வெளிவருகின்றன. அதனால், தினமணிக்குக் கட்டுரை எழுதி அனுப்பலாம் என முடிவு செய்தேன். ஆகஸ்ட் 12 நூலகர் தினம் வருவதால், 2011 ஆகஸ்ட் மாத நூலகர் குரலுக்கு அனுப்ப நூலகர் தினம்என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி வைத்திருந்தேன்அதையே தினமணிக்கு அனுப்பி ஆகஸ்ட் 12 வரை பார்த்துவிட்டு வரவில்லை என்றால் நூலகர்குரலில்  வெளியிடுவது என்று முடிவு செய்து, அக்கட்டுரையின் தலைப்பை இந்திய நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் என்று மாற்றி தினமணிக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன். ஆகஸ்ட் 10 தேதி ஆகியும் கட்டுரை வராததால் தலைவர் திரு.எம்.ஜி.செல்வம் உடனடியாகக் கட்டுரை ஒன்றை அனுப்பச் சொன்னார். அவருக்கும் இதே கட்டுரையை மின்னஞ்சலில் அனுப்பினேன்.
2011 ஆகஸ்ட் 12, காலை 6 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்திலிருந்து நூலகர் திரு.அன்பழகன் தொலைபேசியில் அழைத்து என்னுடைய கட்டுரை தினமணியில் வந்திருப்பதாகக் கூறிப் பாராட்டினார்உடனடியாகச் செய்தித்தாள் கடைக்குச் சென்று பார்த்தேன். எனது கட்டுரை எந்தத் திருத்தமும் இல்லாமல் அப்படியே வந்திருந்தது. இயக்குநர் முனைவர் .அறிவொளி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.
  தினமணியில் எனது கட்டுரை வெளிவந்த தகவலைத் தலைவர் திரு.எம்.ஜி.செல்வம் அவர்களிடம் சொன்னேன். அவர் பாராட்டு தெரிவித்தார்நூலகர்குரலுக்கு அனுப்பியிருந்த கட்டுரை தினமணியில் வெளிவந்து விட்டதால், நன்றி: தினமணி 12.8.2011 - என்று கட்டுரையின் இறுதியில் சேர்க்கச் சொன்னேன். அப்படியே நூலகர் குரலிலும் கட்டுரை வந்தது.

12.08.2011 அன்று தினமணியில் வெளியான எனது கட்டுரை:
இந்திய நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன்
சீர்காழி அருகே உள்ள வேதாந்தபுரம் எனும் கிராமத்தில் பிறந்த டாக்டர். எஸ்.ஆர். அரங்கநாதன் அவர்கள் நூலகத்துறைக்கு ஆற்றியுள்ள சிறப்புமிக்க பங்களிப்புக்காக அவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 12 ஆம் நாளை நூலகர் தினமாக மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்ததுஇதன் மூலம் எஸ்.ஆர். அரங்கநாதனின் கண்டுபிடிப்புகளும், படைப்புகளும் உலகறியச் செய்ய முடியும்
  1892 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் நாள் இராமாமிர்த்த அய்யருக்கும், சீதா லட்சுமிக்கும் புதல்வராகப் பிறந்த அரங்கநாதன், 1921இல் உதவிப் பேராசிரியராகச் சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதத் துறையில் தமது பணியைத் தொடங்கினார்.
  1924இல் சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் நூலகராக நியமிக்கப்பட்டார்இவரே, சென்னை பல்கலைக் கழகத்தின் முதலாவது நூலகர் ஆவார்நூலகர் பணி இவருக்கு விருப்பமில்லாத பணியாக இருந்தபோதிலும், நூலகத்துறைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்இங்கிலாந்து சென்று நூலக அறிவியலில் பயிற்சி பெற்றார்.
  நூல்களைப் பொருள் வாரியாகப் பிரித்து அடுக்குவதற்காகக் கோலன் பகுப்பு முறை (colon classification) என்னும் பகுப்பு முறையைக் கண்டுபிடித்தார். அரங்கநாதன் அவர்களால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கோலன் பகுப்பு முறை, நூலகத்துறையைச் சார்ந்த பல மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதுவரை கையாளப்பட்டுவந்த பகுப்பு முறையைக் காட்டிலும் கோலன் பகுப்புமுறை மாறுபட்டதாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது.
  கோலன் பகுப்புமுறை பல்வேறு வகைப்பட்ட பொருள்களில்(subject) எழுதப்பட்ட நூல்களைப் பிரித்து, நூலகத்தில் அந்தந்தப் பொருளுக்குரிய  நூல்களை அந்தந்த இடத்தில் வைக்க வசதியாக இருந்ததுஇப்பகுப்பு முறை நூலகத்திற்கு வரும் வாசகர்கள் தாம் விரும்பும் பொருள்  (subject) பற்றிய நூல்களை எளிதில் எடுத்துப் படிக்கவும், படித்து முடித்த பின் அந்தந்த நூலுக்குரிய இடத்தில் நூலகர் அடுக்கி வைக்கவும், நூற்றொகை (bibliography) தயாரிக்கவும் பெரிதும் உதவியாக இருந்தது.
  எஸ்.ஆர்.அரங்கநாதனின் கண்டுபிடிப்பான கோலன் பகுப்பு முறையில் நூலகப் பொருள்பட்டி (library catalog) தயாரிப்பதும், அதனை நூலகர்களும், வாசகர்களும் பயன்படுத்துவதும் எளிதாகும்தமிழக அரசின் பொது நுலகத்துறை நூலகங்களில் இப்பகுப்பு முறையில்தான் நூல்கள் பொருள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
  இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் உள்ள நூலகங்கள் இக் கோலன் பகுப்பு முறையைத்தான் இன்றும் பயன்படுத்துகின்றன.
  பிரிட்டனின் தேசிய நூற்றொகை (British National Bibliography)  இக்கோலன் பகுப்பு முறையைச் சில ஆண்டுகள் பயன்படுத்தியது பெருமைக்குரிய செயலாகும்.
  நூலகப் பொருள்பட்டி சீரிய முறையில் அமைய சங்கிலி சுட்டு முறை (chain indexing) நூலகத்துறைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
  கோலன் பகுப்பு முறை, சங்கிலி சுட்டுமுறைபற்றி பல நூல்களை எழுதியதோடு, எண்ணிலடங்கா ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்1939-இல் நூலக மாதிரிச் சட்டத்தை இயற்றினார்இவருடைய முயற்சியினால்தான் 1948இல் சென்னை பொதுநூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டதுஇச்சட்டத்தின்படி உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலகத்துறைக்கு வழங்கப்படுகிறது. பின்பு, பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நூலகராகவும், தில்லி நூலகத்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
  1951இல் இன்டியன் நேஷனல் சைன்டிபிக் டாகுமெண்டேசன் சென்டரின் ஆலோசகராகவும் இருந்தார்1954 முதல் 1964 வரை எப்..டி. செயலராகவும் இருந்தார்.
ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, பிரிட்டன் எனப் பல நாடுகளுக்குச் சென்று நூலகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். புதுதில்லியில் உள்ள நூலகத் தரக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
 நூலக அறிவியல் தொடர்பான இதழின் பதிப்பாசிரியராகவும், டி.ஆர்.டி.சி. நூலக ஆராய்ச்சியின் சிறப்பாசிரியராகவும் பணிபுரிந்தார்பல்வேறு நாடுகளில் நூலகத் தலைவராகவும் கௌரவத் தலைவராகவும் பணியாற்றினார்ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். நூலகத்துறைக்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்புக்காக எஸ்.ஆர்.அரங்கநாதன் இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படுகிறார்
  ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து, உலகளவில் மேதையாகப் போற்றப்பட்ட எஸ்.ஆர். அரங்கநாதனுக்குத் தமிழ்நாட்டில் உரிய கௌரவம் கிடைக்காமல் போனதுதான் கசப்பான உண்மை
  ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20 வரை கொண்டாடப்படும் நூலக வார விழாக்களில் சிறப்பாகப் பணிபுரியும் நூலகர்களுக்கு வழங்கப்படும் நல்நூலகர் விருதினை எஸ்.ஆர்.அரங்கநாதன் பெயரில் வழங்க வேண்டும் என்ற நூலகர்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்றுவரை ஏற்கப்படவில்லை. இனியாவது நூலகர்களுக்கு வழங்கப்படும் விருதினை எஸ்.ஆர்.ஆரங்கநாகன் நல் நூலகர் விருது என்று வழங்கவேண்டும்.
  தெற்காசியாவிலேயே மிகப்பொரிய நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதும், அந்நூலகத்திற்கு இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர். அரங்கநாதனின் பெயர்தான் வைக்கப்படும் என்று நூலகத் துறையில் பணிபுரியும் நூலகர் ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர்.  ஆனால், எஸ்.ஆர். அரங்கநாதன் பெயர் வைக்க வேண்டும் என்று அன்றைய ஆட்சியாளர்களுக்குச் ஆலோசனை சொல்ல சரியான ஆள் அன்று இல்லாமல் போனதுதான் வருத்தமான செய்தி.
  கடந்த ஆட்சியாளர்கள் கொண்டுவந்த சட்டங்களும், திட்டங்களும் மறு பரிசீலனை செய்யப்பட்டு வரும் இவ்வேளையில், சென்னை கோட்டூர்புரம் நூலகத்திற்கு இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதனின் பெயர் வைக்கப்படுமா என்பதுதான் ஆயிரக்கணக்கான நூலகர்களின் எதிர்பார்ப்புநூலகர் தினம் கொண்டாடும் இந்நாளிலாவது நூலகர்களின் விருப்பம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
.............................................................................................................
  அம்மாதக் கடைசி வாரத்தில் சங்கம் சார்பாக இயக்குநரைச் சந்தித்து, சங்கக் கோரிக்கைகள் பற்றி இயக்குநரிடம் பேசினோம்.
 நூலகர்களுக்கு வழங்கப்படும் நல்நூலகர் விருதை இந்திய நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் நல்நூலகர் விருது என்று வழங்க வேண்டும் என்று தினமணி கட்டுரையில் நான் வைத்திருந்த கோரிக்கை தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் இயக்குநரிடம் கருத்துரு கேட்டதாகவும், அதற்கு  இயக்குநர் சாதகமாகப் பதில் அனுப்பியதாகவும் இயக்குநர் கூறினார்.
  அத்துடன், விரைவில் அரசாணை வரலாம் என்றும், அரசாணை வந்ததும் எதிர் வரும் நவம்பர் வாரவிழாவில் வழங்கப்படும் நல்நூலகர் விருது டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது என்று வழங்கப்படும் என்றும் இயக்குநர் கூறினார். பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகள் அரசின் கவனத்திற்கு உடனடியாகச் செல்கிறது என்றார் இயக்குநர்தினமணியில் நான் எழுதிய எனது முதல் கட்டுரைக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இயக்குநரும், திரு.எம்.ஜி.செல்வமும் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு எழுதுமாறு கூறினார்
  அவ்வாண்டு முதல் நூலகர்களுக்கு வழங்கப்படும் நல்நூலகர் விருது இந்திய நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் நல்நூலகர் விருது என்று வழங்கப்படுகிறது.

Comments