நூலகர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயம் செய்யக்கோரி ஒரு நபர் குறைதீர் குழுவில் பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள்:
1. மூன்றாம் நிலை நூலகர்களுக்குத் தர ஊதியம் உயர்த்தி, புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும்:
1996 ஆம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் பெற்று வந்த மூன்றாம் நிலை நூலகர்களின் ஊதியம், ஐந்தாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களைவிடக் குறைந்து, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியமாகக் குறைந்தது. தற்பொழுது, மூன்றாம் நிலை நூலகர்களுக்கான ஊதியம், இளநிலை உதவியாளர்களைக் காட்டிலும் குறைவானது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி இளநிலை உதவியாளர்களுக்கும், அவர்தம் நிலைக்கு இணையாக ஊதியம் பெற்று வந்த அனைவருக்கும் ரூ.5200
+ 2000 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி நூலகர்களுக்கும் ரூ.5200
+ 2000 என நிர்ணயிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் காரணமாக பல்வேறு துறைகளில் பணிபுரிவோருக்கு ஊதிய விகிதம் மாற்றப்பட்டது. அப்பொழுது இளநிலை உதவியாளர்களுக்கான தர ஊதியம் ரூ.2000
-திலிருந்து ரூ.2400 ஆக உயர்த்தப்பட்டது.
இவ்வறிவிப்பினைத் தொடர்ந்து, இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் பெற்றுவந்த பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்குத் தர ஊதியம் ரூ.2000 லிருந்து ரூ.2400 ஆக உயர்த்தப்பட்டது.
குறிப்பாக, பதிவறை உதவியாளர், அனுப்புகை உதவியாளர், தொலைபேசி இயக்குபவர்கள், காவலர்கள், அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் ஓட்டுநர்கள் முதலியோருக்கும் தர ஊதியம் ரூ.400 உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குறைதீர் குழுவில் எமது சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுவில் மூன்றாம் நிலை நூலகர்களுக்கும், இரண்டாம் நிலை நூலகர்களுக்கும் ரூ.400 தர ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அக்குழுப் பரிந்துரையில் இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக தர ஊதியம் பெற்றுவந்த பல்வேறு துறைகளைச் சார்ந்த கேசியர், ஸ்டோர் கீப்பர், டிரேக்டர் டிரைவர், கிராம சுகாதாரச் செவிலியர், நகர சுகாதாரச் செவியலர், வார்டன், கார்டு, மெகானிக், பில் கலெக்டர், முதலான பணியாளர்களுக்கு தர ஊதியம் ரூ.2000லிருந்து ரூ.2400 என்று உயர்த்தப்பட்டது.
அத்துடன், ரூ.1800, ரூ.1900 என தர ஊதியம் பெற்று வந்த எலக்ட்ரீஷியன், லேப் அசிஸ்டன்ட், ஒயர்மேன், பிட்டர், மீட்டர் மெக்கானிக், பம்ப் மெக்கானிக், ஹெல்ப்பர், போர்வெல் கிளீனர், ஈ.சி.ஜி.டெக்னிசன், பைண்டர், சுட்ச் போர்டு ஆப்ரேட்டர், ஏர்கம்ப்ரஸர் டிரைவர் முதலானோர்களின் தர ஊதியமும் ரூ.2400 ஆக உயர்த்தப்பட்டது.
ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குறைதீர் குழுவின் பரிந்துரையின்படி பல்வேறு துறை பணியாளர்களின் தர ஊதியம் உயர்த்தப்பட்டு அரசாணைகள் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
S.No. Name of the Post Existing Scale of Pay Revised Scale of Pay
+
Grade Pay +
Grade Pay
1. Skilled
Assistant Grade--II
(All
entry Level Trade Posts) 5200--20200
+ 2000 5200--20200 +
2400
2. Skilled Assistant Grade--II
(All entry Level Trade Posts) 5200--20200 + 2000 5200--20200 + 2400
3. Cashier / Shroff 5200--20200 + 2000 5200--20200 + 2400
4. Urban Health Nurse 5200—20200 + 2000 5200—20200 + 2400
5. Auxiliary Nurse Mid-Wife /
Worker and Maternity Assistant 5200—20200 + 2000 5200—20200 + 2400
6. Front Office Assistant 5200—20200 + 2000 5200—20200
+ 2400
7. Electrician / Plumber 5200—20200 + 1900 5200—20200 + 2400
8. Junior Assistant 5200—20200 + 2000 5200—20200 + 2400
9. Depot Manager (Grade-III )
/ Store Keeper Grade-III 5200--20200
+ 2000 5200--20200 +
2400
10. Laboratory Assistant 5200--20200 + 2000 5200--20200 + 2400
11. Swimming Pool Instructor 4800--10000
+ 1650 5200--20200 +
2800
12. Assistant Draughtsman 5200—20200 + 2000 5200—20200
+ 2400
13. Skilled Assistant Grade-II 5200--20200
+ 2000 5200--20200 +
2400
14. Junior Tractor Driver 5200—20200 + 2000 5200—20200 + 2400
15. Air Compressor Driver 5200—20200 + 1900 5200—20200
+ 2400
16. Tax Collector 5200--20200 + 2000 5200--20200 + 2400
17. Binders / Menders 5200--20200 + 1800 5200--20200 +
1900
18. Amin, Examiner and Copyist 5200—20200 + 2000 5200—20200 + 2400
19. Surveyor cum Assistant
Draughtsman 5200--20200 + 2000 5200—20200 + 2400
20. Assistant Draughtsman 5200—20200 + 2000 5200—20200
+ 2400
21. Assistant Draughtsman 5200—20200 + 2000 5200—20200
+ 2400
22. Laboratory Assistant 5200—20200 + 1900 5200—20200 + 2400
23. Executive Officer Grade--IV 5200—20200 + 2000 5200—20200 + 2400
24. Auxiliary Nurse Mid-wife /
Maternity Assistant 5200--20200 + 2000 5200--20200 + 2400
25. Refrigeration Operator 5200--20200 + 1900 5200--20200 + 2400
(on par with Grade-II
Trade post)
26. Village Health Nurse (erstwhile
Female Multipurpose Health
Worker) / Auxiliary Nurse
Mid-wife / Maternity Assistant 5200--20200 + 2000 5200--20200 + 2400
Grade-III
5200--20200 + 1900 5200--20200 + 2400
28. Urban Health Nurse (Erstwhile
Auxiliary Nurse Midwife /
Midwife / Multipurpose Health
Worker (Female) / Maternity
Assistant) 5200--20200
+ 2000 5200--20200 +
2400
29. Mechanic Grade-II 5200--20200 + 1900 5200--20200 + 2400
30. Head Works Fitter Grade-II 5200--20200 + 1900 5200--20200 + 2400
31. Electrician Grade-II 5200--20200 + 1900 5200--20200 + 2400
32. Tube Well Mechanic 5200--20200 + 1900 5200--20200 + 2400
33. Meter Reader 5200--20200
+ 1900 5200--20200 +
2400
34. Filter Bed Operator 5200--20200 + 1900 5200--20200 + 2400
35. Pipe Line Fitter Grade-II 5200--20200
+ 1900 5200--20200 +
2400
35. Switch Board Operator 5200--20200 + 1900 5200--20200
+ 2400
36. Wireman 5200--20200 + 1900 5200--20200 + 2400
37. Fitter Grade-II 5200--20200 + 1900 5200--20200 + 2400
38. Meter Mechanic Grade-II 5200--20200
+ 1900 5200--20200 +
2400
39. Pump Mechanic 5200--20200 + 1900 5200--20200 + 2400
40. Helper (Wireman) 5200--20200
+ 1900 5200—20200 + 2400
41. Bore Well Cleaner 5200--20200 + 1800 5200—20200 + 1900
42. ECG / EEG / Technician /
Audio Metrician 5200--20200 + 1900 5200—20200 + 2400
43. Tap Inspector 5200--20200 + 1900 5200—20200 + 2000
44. Work Inspector 4800--10000 + 1650 5200—20200 + 1900
45. Assistant Draughtsman 5200--20200 + 2000 5200--20200
+ 2400
46. Head Warden 5200--20200
+ 2000 5200--20200 +
2400
47. Audiometrician 5200--20200 + 2000 5200--20200 + 2400
48. Fitter Grade-II 5200--20200 + 1900 5200--20200 + 2400
49. Electrician 5200--20200
+ 1900 5200--20200 +
2400
50. Chief Guard / Warden Grade-I 5200--20200 + 1900 5200--20200 + 2000
51. Warden Grade-II / Gateman /
Senior Reception Home Assistant 5200--20200 + 1800 5200--20200 +
1900
52. Head Matron / Matron Grade-I 5200--20200 + 1800 5200--20200 + 1900
53. Binder Grade-II 5200—20200 + 1900 5200—20200 + 2400
54. Laboratory Assistant 5200--20200 + 1900 5200--20200 + 2400
மேற்படி அரசாணைகளின்படி, நூலகர்களைவிட குறைவான தர ஊதியம் பெற்றுவந்த பல்வேறு துறை பணியாளர்களுக்கு நூலகர்களை விட அதிக தரஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, இளநிலை உதவியாளர்களுக்கும், இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் பெற்று வந்த பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்குத் தர ஊதியம் ரூ.400 உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில், பொது நூலகத்துறையில் பணிபுரியும் மூன்றாம் நிலை, இரண்டாம் நிலை நூலகர்களுக்குத் தர ஊதியம் உயர்த்தப்படவில்லை.
இளநிலை உதவியாளர் பதவிக்கு குறைந்த பட்சக் கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. ஆனால், மூன்றாம்நிலை நூலகர் பணியிடத்திற்கு குறைந்த பட்சக் கல்வித்தகுதி +2 உடன் நூலக அறிவியலில் சான்றிதழ் படிப்பு (சி.எல்.ஐ.எஸ்.) ஆகும். அத்துடன், நூலகர் பணியிடம் தொழில்நுட்பப் பணியிடமாகும். இளநிலை உதவியாளர்கள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் பணிபுரிகின்றனர். ஆனால், நூலகர்கள் வாரத்திற்கு 6 நாட்கள் பணிபுரிகின்றனர்.
மற்ற துறை பணியாளர்கள், ஓய்வு பெறுவதற்குள் குறைந்தது 3 பதவிஉயர்வாவது பெறுகின்றனர். ஆனால், நூலகத்துறையில் பணிபுரியும் நூலகர்களில் 90 சதவிகிதத்தினர் எந்த பதவி உயர்வும் இல்லாமல் மூன்றாம்நிலை நூலகர்களாகவே ஓய்வுபெறுகின்றனர். அத்துடன், நூலகத்தில் காணாமல் போகும் நூல்களுக்கு உரிய தொகை நூலகர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இளநிலை உதவியாளர்களைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி, கூடுதல் பணி நாள், கூடுதல் பொறுப்பு ஆகியவற்றுடன் பணிபுரியும் நூலகர்களுக்கு இளநிலை உதவியாளர்களைக் காட்டிலும் கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தற்பொழுது, மூன்றாம் நிலை நூலகர்களுக்கான ஊதியம் இளநிலை உதவியாளர்களைக் காட்டிலும் குறைவானது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி வைக்கப்பட்டுள்ள ஊதிய ஒப்பீட்டுப் பட்டியல் தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளோம்.
ஆகவே, மூன்றாம் நிலை நூலகர்களுக்கு ரூ.400 தர ஊதியம் உயர்த்தி, அதன் பிறகு புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யுமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. இரண்டாம் நிலை நூலகர்களுக்குத் தர ஊதியம் உயர்த்தி, புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும்:
அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் உதவியாளர்களுக்கும், அவர்களுக்கு இணையாக ஊதியம் பெற்று வந்த இதரத் துறைப் பணியாளர்களுக்குமான ஊதியம் ரூ.5200 + 2400 தர ஊதியம் என்பதை, ரூ.5200 + 2800 என்று உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால், உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் பெற்றுவந்த இரண்டாம்நிலை நூலகர்களுக்கான ஊதியம் ரூ.5200 + 2400 தர ஊதியம் என்பதை, ரூ.5200 + 2800 என்று உயர்த்தி வழங்கப்படவில்லை.
இதன் விளைவாக, இன்று புதியதாக பணியில் சேரும் இளநிலை உதவியாளர்களின் ஊதியமும், இரண்டாம் நிலை நூலகர்களின் ஊதியமும் ஒன்றாகிப் போனது.
ஆகவே, இரண்டாம் நிலை நூலகர்களுக்கு ரூ.400 தர ஊதியம் உயர்த்தி, அதன் பிறகு புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யுமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
3. பி.எல்.ஐ.எஸ். படித்த நூலகர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்:
மூன்றாம் நிலை நூலகர் மற்றும் இரண்டாம் நிலை நூலகர் பணியிடத்துக்கான குறைந்த பட்சக் கல்வித்தகுதி +2 மற்றும் நூலக அறிவியலில் சான்றிதழ் படிப்பு ஆகும்.
மூன்றாண்டு பட்டப்படிப்புடன் ஓராண்டு பி.எல்.ஐ.எஸ். மற்றும் ஓராண்டு எம்.எல்.ஐ.எஸ். படித்த நூலகர்களுக்கு தற்பொழுது ஓர் ஊக்க ஊதியம் மட்டும் வழங்கப்படுகிறது.
மூன்றாண்டு பட்டப்படிப்புடன் ஓராண்டு பி.எட். படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊக்க ஊதியம் (அஃதாவது இரண்டு ஊதிய உயர்வுகள் 6
%) வழங்கப்படுகிறது. அத்துடன் பட்ட மேற்படிப்பு படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேலும் ஓர் ஊக்க ஊதியம் (இரண்டு ஊதிய உயர்வுகள் 6 %) வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியமாக அடிப்படை ஊதியத்தில் மொத்தம் 12 %
ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்களைப் போல், பட்டப்படிப்புடன் பி.எல்.ஐ.எஸ். படித்த நூலகர்களுக்கு ஓர் ஊக்க ஊதியமாக இரண்டு ஊதிய உயர்வுகளும், எம்.எல்.ஐ.எஸ். படித்த நூலகர்களுக்கு இரண்டு ஊக்க ஊதியமாக, அதாவது நான்கு ஊதிய உயர்வுகளும் வழங்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
4. ஊர்ப்புற நூலகர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்:
ஊர்ப்புற நூலகர்கள் சத்துணவு அமைப்பாளர்ளைப் போல, பகுதிநேரப் பணியாளர்களாகக் கருதி 3000
+ 300 என்ற சிறப்புக் காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைவான ஊதியத்தை வைத்துக்கொண்டு இன்றைய விலைவாசியில் குடும்பத்தை நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஊர்ப்புற நூலகர் பணியிடத்திற்கு குறைந்த பட்சக் கல்வித்தகுதி +2 உடன் நூலக அறிவியலில் சான்றிதழ் படிப்பு (சி.எல்.ஐ.எஸ்.) ஆகும்.
ஊர்ப்புற நூலகர்கள் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை என இரண்டு வேளையும் பணிபுரிகின்றனர். அத்துடன் இவர்கள் வாரத்திற்கு 6 நாட்கள் பணிபுரிகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 6.30 வரை பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களை பகுதிநேரப் பணியாளர்கள் பட்டியலில் வைத்திருப்பது ஏற்புடையதன்று.
ஆகவே, ஊர்ப்புற நூலகர்களை முழு நேரப் பணியாளர்களாகக் கருதி முறையான காலமுறை ஊதியம் (4800 - 10000 +1650 தர ஊதியம்) வழங்கி, அதன் பிறகு 7 வது ஊதியக்குழு ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யுமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Comments