கரோனா: இயற்கைச் சீற்றமா? இறைவன் சீற்றமா?
கரோனோ வைரஸ் நோயால் உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பான பல்வேறு கருத்துக்கள், பல்வேறுபட்ட மக்களிடம் இருந்து வந்துகொண்டு இருக்கின்றன.
இயற்கைக்கு விரோதமாக மக்கள் நடந்து கொள்வதால்தான் இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுகின்றன என்று பரவலாக பேசப்படுகிறது. அதிக அளவில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதும், அதிக அளவில் சுற்றுச்சூழலை கெடுப்பதும், லட்சக்கணக்கான விமானங்களை தினமும் வானில் செலுத்தி வளி மண்டலத்தின் தூய்மையைக் எடுப்பதும், புவியை வெப்பமயமாக்கச் செய்வதும், ஓசோன் படலத்தை சிதைப்பதும் இயற்கை விரோதச் செயல்களாகும். இதுபோன்ற செயல்கள் தான் மனிதனுக்கு கரோனா வைரஸ் நோய் ஏற்படக் காரணம் என்று பலரால் சொல்லப்படுகிறது.
ஆனால், இதுபோன்ற இயற்கைக்குப் புறம்பான மக்களின் செயல்கள்தான் வைரஸ் நோய் தோன்றக் காரணம் என்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை.
இருந்த போதிலும் பெரும்பாலான மக்கள் திரும்பத் திரும்ப இதையே தான் கூறி வருகின்றனர். அதற்குக் காரணம் உலகில் எந்த ஒரு பகுதியில் எந்த ஒரு பேரழிவு ஏற்பட்டாலும் இயற்கை வளங்கள் அழிப்பு தான் காரணம் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறி வருவது தான்.
இவர்கள் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை. இவர்கள் கூறுவது எல்லாம் "இயற்கையைக் காப்போம், இயற்கையைக் காப்போம்" என்பதுதான்.
மனிதர்கள் இயற்கையை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் உண்மை. இயற்கை தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்தது.
ஆனால், இயற்கையைக் காப்போம் என்று இயற்கை ஆர்வலர்கள் திரும்பத் திரும்பப் பேசி வருவதற்குக் காரணம், இயற்கையின் தன்மையை நாம் மாற்றினால் அதனால் பல பின்விளைவுகள் ஏற்படும் என்பதுதான்.
அண்மைக் காலமாக நடந்து வரும் அழிவுகள் இது உண்மை என்று நமக்கு உணர்த்துகின்றன. இயற்கைக்கு மாறாக மனிதகுலம் ஏதாவது ஒன்றினைச் செய்தால், அதற்கு ஓர் எதிர்வினை உருவாவதை நாம் பார்க்கிறோம்.
அண்மைக் காலமாக மழைப்பொழிவு குறைந்து வருவதற்குக் காரணம், புவி வெப்பமாதலும் , மனிதன் இயற்கைக்கு மாறாக செயல்படுவதும் தான் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இதுபோன்ற இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயல்படும்போது ஏற்படுகின்ற எதிர் வினை பேரழிவுகளால் மனிதகுலம் மட்டும் பாதிப்படைவதில்லை; உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்படைகின்றன.
இப்படி, இயற்கைக்கு எதிரான மனிதர்களின் செயல்பாடுகள் பேரழிவு ஏற்படும் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.
ஆனால், கரோனோ வைரஸ் நோயால் உலக மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற நோய்த்தொற்று, உயிர் இழப்பு போன்றவை இயற்கையால் ஏற்பட்ட பேரழிவு இல்லையே?
அப்படியானால், இன்றைக்கு கரோனோ வைரஸ் நோயால் உலக மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருப்பது ஆண்டவன் செய்யலா? என்கின்ற கேள்வி எழுகிறது.
இந்தக் கேள்விக்கு 'ஆம்' என்றோ, 'இல்லை' என்றோ உடனடியாக பதில் சொல்லிவிட முடியாது.
இதைப் பற்றி யோசிக்கும் போது மனித குலத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி சற்று பின்னோக்கிப் பார்த்தால் சில உண்மைகள் தோன்றலாம்.
'மனிதன், குரங்கிலிருந்து வந்தவன்' என்று டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு சொல்கிறது. இதைத் தான் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாடப் புத்தகத்தில் வைத்து கற்பிக்கப்படுகிறது.
குரங்குகள் இன்றைக்கும் காய், பழம், இலை, பூ, கிழங்கு போன்ற தாவரங்களின் பாகங்களைத் தான் உணவாக எடுத்துக் கொள்கின்றன. குரங்குகள் எவ்வளவு பசியாக இருந்தாலும், இன்னொரு உயிரினத்தை அடித்துச் சாப்பிடுவதில்லை. குரங்கு ஒரு தாவர உண்ணி. குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்றால் மனிதனும் தாவர உண்ணியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
நெடுங்காலத்துக்கு முன்பு அவன் வாழ்ந்த காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க முடியாத பறவைகள், சிறுசிறு விலங்குகள் இறந்து போயிருக்கும். தீயால் உருகுழைந்த இந்த பறவைகளையும், சிறுசிறு விலங்குகளையும், தீயில் வெந்த கிழக்கு என்றோ, காய் என்றோ சாப்பிட்டு இருப்பவர்கள். அந்த சுவை அவர்களுக்குப் பிடித்து இருக்கலாம். பிறகு, அவர்கள் சிறுசிறு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி தீயில் சுட்டு சாப்பிட்டு இருப்பவர்கள். இப்படித்தான் மனிதர்கள் மாமிசம் சாப்பிடும் பழக்கத்திற்கு வந்திருப்பார்கள்.
நாகரிகம் வளர, வளர மக்கள் மாமிசத்துடன் நறுமணப் பொருள்கள் சேர்ந்து சமைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கக் கூடும்.
மனிதனுக்கு வரும் பெரும்பாலான கொடிய நோய்கள் எல்லாம் வைரஸ் கிருமிகளால்தான் ஏற்படுகின்றன. இந்த வைரஸ் கிருமிகள் எல்லாம் விலங்குகளிடமிருந்து தான் மனிதனுக்கு வருகின்றன.
தற்பொழுது, பெரும்பாலான மக்கள் அசைவத்துக்கு அடிமையாகி விட்டார்கள். ஆரம்பக் காலத்தில் குறிப்பிட்ட சில வகை விலங்குகளையும், பறவைகளையும் மட்டும் சமைத்து சாப்பிட்டு வந்த வரையில், அவைகளில் இருந்து வந்த வைரஸ்களால் மனிதனுக்கு பாதிப்பு குறைவாக இருந்தது. அந்த பாதிப்புகளில் இருந்து மனிதன் ஓரளவுக்கு தப்பித்து வந்திருக்கிறான்.
ஆனால், இன்றைக்கு மனித குலம் இவ்வளவு தூரம் நாகரிக வளர்ச்சி அடைந்த போதிலும், அருவருப்பான காட்டு விலங்குகளை பச்சையாகவும், அரைகுறையாக வேக வைத்தும் சாப்பிடுவது ஏன்?
காட்டு விலங்குகள் கூட எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிட கூடாது என்று ஒரு வரையறை வைத்துக்கொண்டுதான் வாழ்கின்றன.
கோவைட்19 வைரஸ் வூகான் மாகாணத்தில் உள்ள காட்டு விலங்குகள் இறைச்சிக் கடையில் விற்கப்பட்ட எறும்புத்தின்னி என்னும் காட்டு விலங்கில் இருந்து மனிதனுக்கு வந்ததாக சீன அரசு சொல்கிறது.
கண்டதை எல்லாம் தின்ன சீனா மக்கள் அப்படி என்ன பஞ்சப் பரதேசிகளா?
வன விலங்கு இறைச்சி கடைகளை சீன அரசு உடனடியாக மூட வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கூறுகின்றன.
ஆண்டவன் படைப்புக்கு எதிராக மனிதன் செயல்பட்டால் மனித குலம் அழிந்து போகும் என்பதற்கு கரோனோ வைரஸ் 19 ஓர் எச்சரிக்கை.
கரோனோ வைரஸ் 19லிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் இதைவிட கொடிய வைரஸ் தோன்றி மனித குலத்தை அழித்து விடும்.
எச்சரிக்கை!
Comments
எச்சரிக்கை!
மிகச் சிறப்பு....