தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பதிப்பாளர்கள் - படைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் - அரூர்



    தருமபுரி,  கிருஷ்ணகிரி மாவட்ட பதிப்பாளர்கள்  -  படைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் 10.10.2018 புதன்கிழமை அரூர் கிளை நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், படைப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
   அரூர் கிளை நூலக நூலகர் திருமதி இரா.கற்பகம் அனைவரையும் வரவேற்றார்.
  இக்கூட்டத்திற்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் திரு.சி.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
   படைப்பளர் பதிப்பாளர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூலகர் சி.சரவணன், மாவட்டத்தில் உள்ள படைப்பளர்களையும் பதிப்பாளர்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, எடுத்துரைத்தார்.
     தகடூர் புத்தகப் பேரவை தலைவர் திரு.சிசுபாலன், தருமபுரி மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.இரவீந்திர பாரதி, கவிஞர் நவகவி, கடத்தூர் முத்தமிழ் மன்றத் தலைவர் புலவர் கோ.மலர்வண்ணன், பதிப்பாளர் திரு.திருவேங்கடம், திருவள்ளுவர் பொத்தக இல்லம் திரு.நெ.அறிவுடைநம்பி, திரு. ஆதிமுதல்வன், ஆசிரியர் சிங்காரவேலன், திரு.மாரி கருணாநிதி, திரு..கொ.அம்பேத்கார், திரு வஜ்ஜிரம், மொரப்பூர் இலக்கிய வட்டத் தலைவர் திரு..தங்கமணி, திருமதி மும்தாஜ், நூலகர் திரு.சோமு உள்ளிட்ட பலரும் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
     1.   படைப்பாளர் பதிப்பாளர் சங்கத்தின் அரூர் பகுதி ஒருங்கிணைப்பாளராக  திரு. ஆதிமுதல்வன் செயல்படுவது.
  2.  நவம்பர் மாதத்தில் கவிதை, சிறுகதைக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவது.
   3.  நவம்பர் 14 முதல் 20 வரை நடைபெற உள்ள நூலக வாரவிழாவை நூலகங்களில் சிறப்பாக நடத்த மாவட்ட படைப்பளர்கள் ஒத்துழைப்பு நல்குவது.
 4. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இலக்கிய அமைப்புகளையும் தொடர்புகொண்டு படைப்பாளர் பதிப்பாளர் சங்கச் செயல்பாடுகளில் ஈடுபடச்செய்வது.

இறுதியில் நூலகர் திரு. தீ.சண்முகம் நன்றி கூறினார்.

Comments