தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயங்கி வரும் அனைத்து இலக்கிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பதிப்பாளர் படைப்பாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நூலகர் சி.சரவணன் எழுதும் மடல்.
அன்புடையீர், வணக்கம்,
தருமபுரி, கிருஷ்ணகிரி
மாவட்ட பதிப்பாளர்கள் - படைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் அன்று 23.9.2018 ஞாயிற்றுக்கிழமை
தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச்
சேர்ந்த பதிப்பாளர்கள், படைப்பாளர்கள்
திரளாக கலந்துகொண்டனர். இது தொடர்பான பத்திரிகைச் செய்திகள் படித்திருப்பீர்கள்
என்று நம்புகிறேன்.
இக்கூட்டத்தில்
கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட
பதிப்பாளர், படைப்பாளர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்குவது. இதன்
ஒருங்கிணைப்பாளராக நூலகர் சி.சரவணன் செயல்படுவது.
2. மாவட்டத்தில் செயல்படுகின்ற
அனைத்து இலக்கிய அமைப்புகள், தமிழ்ச்
சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடந்துவது. இதனையொட்டி அரூர் பென்னாகரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில்
தனி கூட்டங்கள் நடத்துவது.
3. மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டை ஒட்டி அக்டோபர்
மாதத்தில் பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்குக் கட்டுரை, கவிதை
போட்டிகள் நடத்தி பரிசு அளிப்பது. இதன்
மூலம் இளம் இலக்கியவாதிகளை அடையாளம் காண்பது.
4. நவம்பர் மாதத்தில் இளம்
படைப்பாளர்களுக்கான கவிதை, சிறுகதை
பயிற்சி பட்டறைகள் நடத்துவது.
5. படைப்பாளர்களின் படைப்புகள்
வெளிவர உதவி செய்வது.
6. மாவட்ட படைப்பாளர்களின்
நூல்களைத் தொகுத்து ஆவணப்படுத்துவது.
7. இந்த அமைப்புக்குத் தனியாக
இணையதளம் தொடங்கி, மாவட்ட படைப்பாளர்களின்
படைப்புகளை இணையத்தில் வெளியிடுவது.
மேற்படி கூட்டத்தில்
எடுக்கப்பட்ட முடிவின்படி தருமபுரி,
கிருஷ்ணகிரி
மாவட்டங்களைச் சேர்ந்த பதிப்பாளர்கள்,
படைப்பாளர்கள்
ஒன்றிணைக்கும் பொருட்டு, தருமபுரி
கிருஷ்ணகிரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பணி
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சங்கத்தில்
உறுப்பினராகச் சேர விரும்புபவர்கள் வெள்ளைத்தாளில் படிவத்தைப் பூர்த்தி செய்து
கொடுக்கத் தேவையில்லை. வளர்ந்து வரும் தொழில்நுப்பத்திற்கு ஏற்ப உறுப்பினர்
சேர்க்கையை இணைய தளம் மூலம் மேற்கொண்டுள்ளோம். வாட்சப் மற்றும் முகநூலில்
கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கைச் சொடுக்கினால் விண்ணப்பப் படிவம் வரும், அதனைப் பூர்த்தி செய்து
சமர்ப்பித்தால் போதும். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பதிவு
செய்வதில் சிலருக்கு ஏற்படுகின்ற சந்தேகத்தைக் கேட்டு பதிவு செய்து வருகின்றனர்.
முதல் நாளிலியே புத்தகத்
திருவிழா தலைவர் மருத்துவர் இரா.செந்தில்,
தகடூர்
புத்தகப் பேரவைத் தலைவர் தோழர் சிசுபாலன்,
ஓசூர்
தமிழ்ச்சங்கத் தலைவர் கருமலைத் தமிழாழன்,
வாழ்வியல்
முன்னேற்றம் இதழ் ஆசிரியர் கவியருவி ந.நாகராஜன், கடத்தூர் முத்தமிழ் மன்றத் தலைவர் பாவலர் மலர்வண்ணன், உள்ளிட்ட
முன்னணி படைப்பாளர்கள் பதிவு செய்தனர். தொடர்ந்து படைப்பாளர்களும் பதிப்பாளர்களும்
பதிவு செய்து வருகின்றனர்.
இந்த அமைப்பின்
தொலைநோக்குப் பார்வைதான், படைப்பாளர்கள்
மற்றும் பதிப்பாளர்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம்.
இருந்தாலும் சிலர்
என்னைத் தொடர்புகொண்டு சில சந்தேகங்களைக் கேட்டனர். அவர்களின் சந்தேகங்களுக்கு
பதில் கொடுத்தவுடன் அவர்கள் நமது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இலக்கிய அமைப்புகளின்
நிர்வாகிகளுக்கு இதன்மூலம் சில விளக்கத்தைத் தர விரும்புகிறேன்.
1. புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு ஏற்கெனவே
செயல்பட்டு வரும் எந்த ஒரு அமைப்புக்கும் போட்டி அமைப்பு அன்று.
2. மாவட்டத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் இலக்கிய
அமைப்புகளின் பணிகளில்,
செயல்பாடுகளில் இந்த அமைப்பு தலையிடாது.
3. இந்த
அமைப்பின் நோக்கங்கள், எதிர்காலச்
செயல் திட்டங்கள் பற்றி ஏற்கெனவே பல பதிவுகளில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
4. இந்த அமைப்பின் பிரதான நோக்கமே தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட
படைப்பாளர்களின் விவரங்களையும், அவர்களது படைப்புகள் பற்றிய
விவரங்களையும் இணையத்தில் ஏற்றி உலகறியச் செய்வதே ஆகும். இதன்மூலம்
வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, நார்வே, அமெரிக்கா, இந்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள்கூட நமது
மாவட்ட படைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும், அவர்களது
படைப்புகளை வாங்கவும் முடியும். அத்துடன், நமது மாவட்ட படைப்பாளர்களுக்கு
உரிய அங்கிகாரம் கிடைக்கும் என்பதில் சந்தேகவில்லை.
தருமபுரி கூட்டத்தில்
எடுக்கப்பட்ட முடிவின்படி அரூர், பென்னாகரம், கிருஷ்ணகி ஆகிய இடங்களில்
பதிப்பாளர் படைப்பாளர் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தி அந்தந்த பகுதி
படைப்பாளர், பதிப்பாளர்களின்
ஆலோசனைகள் பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்தக் கூட்டம் 10.10.2018 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு அரூர் 4 ரோடு அருகில் உள்ள கிளை நூலகத்தில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நூலகர் இரா.கற்பகம் (9443734013) மற்றும் நூலகர் தீ.சண்முகம் (9489444671) செய்து வருகிறார்கள்.
இக்கூட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் பகுதிகளில் உள்ள படைப்பாளர்கள், பதிப்பாளர்கள், இலக்கிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள், புத்தக ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தருமபுரியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாத தருமபுரி பகுதி படைப்பாளர்களும் இக்கூட்டத்திற்கு வருகை தந்து தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு வேண்டுகிறோம்.
இக்கூட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் பகுதிகளில் உள்ள படைப்பாளர்கள், பதிப்பாளர்கள், இலக்கிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள், புத்தக ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தருமபுரியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாத தருமபுரி பகுதி படைப்பாளர்களும் இக்கூட்டத்திற்கு வருகை தந்து தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு வேண்டுகிறோம்.
அரூர் கூட்டத்தைத்
தொடர்ந்து பென்னாகரம், கிருஷ்ணகிரி
நகரங்களில் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
அதனைத்தொடர்ந்து
தருமபுரி நகரில் விரிவான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்றை நடத்தி, இந்த அமைப்புக்கான எதிர்காலச்
செயல்திட்டம் இறுதி செய்யப்பட உள்ளது.
ஆகவே, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட
பதிப்பாளர்கள், படைப்பாளர்கள்
தங்கள் பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்க
வேண்டுகிறோம்.
மீண்டும் தெளிவு
படுத்துகிறேன். இந்த அமைப்பு ஏற்கெனவே இயங்கி வரும் எந்த ஒரு அமைப்புக்கும்
போட்டியானது அன்று. ஆகவே, தருமபுரி
கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பதிப்பாளர்கள்,
படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகளின்
பொறுப்பாளர்கள், பல்வேறு
இலக்கிய அமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட
பதிப்பாளர் படைப்பாளர் சங்கத்தில் உறுப்பினர் ஆகுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்,
நூலகர்
சி.சரவணன்.(9442265816)
(02.10.2018)
Comments