மூன்றாம் நிலை நூலகர் பணிமூப்புப் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளனவா?

    மூன்றாம் நிலை நூலகர்களுக்கான பணிமூப்புப் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பல மாவட்ட நூலக நண்பர்கள் என்னுடன் பேசி வருகின்றனர்.

குறிப்பாக, மாவட்ட மாறுதலில் வந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டு வருத்தப்படுகின்றனர்.

 கோரிக்கை மனுவின் மாதிரிக் கடிதம் ஒன்று எழுதுமாறு நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மாதிரிக் கடிதம் ஒன்றை நண்பர்கள் பார்வைக்கு வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிட்டேன்.

அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் இருந்து நூலக நண்பர்கள் பணிமூப்பு பட்டியல் பற்றி வேறு சில பிரச்சினைகளைப் பற்றியும் குறிப்பிட்டு வருத்தப்பட்டனர். அவற்றில் சில:

  1. ஊர்ப்புற நூலகங்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டபோது, சொந்த மாவட்டத்தில் பணியிடம் இருந்தும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டதாக பலர் குறிப்பிட்டனர். அவர்கள் மீண்டும் சொந்த மாவட்டத்திற்கு திரும்பியபோது பணிமூப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.
  2. நூலகர் ஒருவர் பேசும் போது, நாங்கள் ஊர்ப்புற நூலகராக இருந்து மூன்றாம் நிலை நூலகராக பதவி உயர்வு பெற்றபோது, மாற்றுத்திறனாளி நூலகர்களுக்கு சலுகையாக உள் மாவட்டங்களில் பணி வழங்கப்பட்டது.  அவர்கள் எங்களை விட பணி நியமனத்தில் இளையவர்களாக இருந்தாபோதிலும், நாங்கள் அவர்களுக்கு விட்டுகொடுத்து விட்டு வெளிமாவட்டங்களுக்குச் சென்றோம். பிறகு, மாவட்ட மாறுதலில் சொந்த மாவட்டத்திற்கு வந்தோம். எங்களைவிட இளையவர்களாக இருந்த அந்த மாற்றுத்திறனாளி நூலகர்கள், இந்த பணிமூப்புப் பட்டியலில் எங்களைவிட முன்னதாக இருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் என்று மனிதாபமான அடிப்படையில்  விட்டு கொடுத்த எங்களுக்கு இது தண்டனையா? என்று ஆதங்கப்படுகின்றனர்.
  3. 26.10.2006 அன்று 554 ஊர்புற நூலகங்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக (Onetime absorption) பணியில் சேர ஆணை வழங்கப்பட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் அன்று முற்பகல் அல்லது பிற்பகல் நியமிக்கப்பட்டனர். வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டவர்கள் 28.10.2006 அன்று நியமிக்கப்பட்டனர். ஆனால், ஒரு சில மாவட்டங்களில் உள்மாவட்டத்தில் இடம் கிடைத்தவர்களுக்கும் 28.10.2006 அன்றுதான் மூன்றாம் நிலை நூலகர்களாக நியமிக்கப்பட்டனர். மாவட்ட நூலக அலுவலர் செய்த தவறுக்கு நாங்கள் பலிகடா ஆகிவிட்டோமே என்று சிலர் கூறினர்.
  4. இந்த பணி மூப்பு பட்டியலில், 1998 ஆம் ஆண்டு ஊர்புற நூலகராக  பணியில் சேர்ந்தவர் ஒருவர், 2000ஆம் ஆண்டு ஊர்புற நூலகராக பணியில் சேர்ந்தவரை விட, பணி மூப்பில் பின்தங்கி விட்டதாக கூறினார்.

 

சரி, இந்த சீனியாரிட்டி பட்டியலில் உள்ள குளறுபடி பற்றி எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

Ø  இப்பொழுது வந்துள்ள மூன்றாம் நிலை நூலகருக்கான பணிமூப்புப் பட்டியல், மாவட்ட பணிமூப்புப் பட்டியலா? மாநில பணிமூப்பு பட்டியலா?

Ø  கேட்டால், மாவட்ட பணிமூப்புப் பட்டியல் என்கிறார்கள். அப்படி எனில் மாவட்ட வாரியாக கொடுத்து இருக்கலாமே? 2006 ஆம் ஆண்டு 554 ஊர்புற நூலகர்கள் மூன்றாம் நிலை நூலகர்களாக நியமிக்கப்பட்டபோது பணிமூப்புப் பட்டியல் மாவட்ட வாரியாக தானே கொடுத்தார்கள்?

Ø  மூன்றாம் நிலை நூலகர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் நியமன அலுவலர் என்பதால், மாவட்ட பணிமூப்பு என்கிறார்கள்.

Ø  ஊர்புற நூலகர்களுக்கும் மாவட்ட நூலக அலுவலர்தான் நியமன அலுவலர். அவர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு கொடுக்கும்போது, மாவட்ட பணிமூப்பு அடிப்படையில் மாவட்ட நூலக அலுவலர்தான் அந்தந்த மாவட்டங்களில் பதவி உயர்வு கொடுக்க வேண்டும். ஆனால், மாநில பணிமூப்புப் பட்டியல் மூலம் இயக்குநர்தானே பதவி உயர்வு வழங்குகிறார்? 

Ø  இரண்டாம் நிலை நூலகர்கள் மாவட்ட அளவில் நியமிக்கப்படுகிறார்களா? மாநில அளவில் நியமிக்கப்படுகிறார்களா?

Ø   15 ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்டங்களில் காலியாகும் இரண்டாம் நிலை நூலகர் பணி இடங்களை, அந்தந்த மாவட்ட மூன்றாம் நிலை நூலகர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில், அந்தந்த மாவட்டத்தில் இயக்குனரால் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதாவது, மூன்றாம் நிலை நூலகர்களுக்கு மாவட்ட பணிமூப்பு அடிப்படையில், அந்தந்த மாவட்டங்களில் இரண்டாம் நிலை நூலகராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. வேறு மாவட்ட நூலகர்கள் நியமிக்கப்பட மாட்டாகர்கள்.

Ø  ஆனால், தற்போது இரண்டாம் நிலை நூலகர் பணியிடங்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மூன்றாம் நிலை நூலகர்களைக் கொண்டு நிரப்பப்படுவதில்லை. மாநில அளவில் நிரப்பப்படுகின்றன. மாநில அளவில் நிரப்பப்படும்போது மாநில பணிமூப்பு அடிப்படையில்தானே நிரப்ப வேண்டும்?

Ø  ஒன்று, பணி மூப்பு மாவட்ட அளவில் என்று முடிவு செய்தால், காலியாக உள்ள இரண்டாம் நிலை நூலகர் பணிபடங்களை அந்தந்த மாவட்டத்தில் பணிமூப்பில் உள்ள மூன்றாம் நூலகர்களைக் கொண்டுதான் நிரப்ப வேண்டும். வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவரை நியமிக்கக் கூடாது.

Ø  இரண்டு, பணிமூப்பு மாநில அளவில் என்று முடிவு செய்தால், மாவட்ட மாறுதலைப் பொருட்படுத்தக் கூடாது.

Ø  தற்போது காலியாக உள்ள இரண்டாம் நிலை நூலகர் பணியிடங்களை மாநில அளவில் நிரப்ப முடிவு செய்துல்லதால், மாவட்ட மாறுதலைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Ø  ஆகவே, date of joining as grade III என்பதை seniority date ஆக வைத்து, மூன்றாம் நிலை நூலகர்களுக்கான பணி மூப்புப் பட்டியல் இறுதி செய்ய வேண்டும்.

 

-    - சி.சரவணன். முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர், பொது நூலகத்துறை அலுவலர் சங்கம்.

watsapp: 8668192839

 


Comments