ஜெயகாந்தனின் 'பிரளயம்' என்ன சொல்கிறது?

    எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய பிரளயம் என்னும் இந்த நூலை கடந்த வாரம் வாசித்தேன்.

இந்தக் கதையில், சென்னையில் ஆற்றங்கரை ஓரமாக குடிசைகள் போட்டு வாழ்ந்து வரும் கீழ்த்தட்டு மக்களின் சராசரி வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டுகிறார் ஜெயகாந்தன்.

கதையின் நாயகி பாப்பாத்தி, அழகப்பர் வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்கிறாள்அழகப்பர் மகன் செல்வத்துடன் நெருக்கமாக இருக்கிறாள்அவளுக்கும் ரிக்ஷா ஒட்டும் தீனனுக்கும் திருமணம் நடைபெறுகிறதுதிருமணம் முடிந்த அடுத்த நாள் வழக்கம்போல, அழகப்பர் வீட்டிற்கு வேலைக்குப் போகிறாள்செல்வத்தைச் சந்தித்து, "உங்களுக்குத் திருமணம் நடைபெறும் வரை நான் இங்கு வேலைக்கு வரமாட்டேன்" என்று கூறிவிட்டு வந்து விடுகிறாள்.

பக்கிரி ஜெயிலுக்கு போய் மூன்று வருடம் கழித்து வருகிறான். தன் மனைவி பச்சியம்மாளும் குழந்தையும் சாப்பாட்டுக்கு என்ன செய்திருப்பார்களோ என்று வேதனைப்படுகிறான். இவன் மனைவி மாணிக்கத்தோடு வாழ்வதாகக் கேள்விப்படுகிறான்இவன் ஆத்திரப் படுவதில்லை. மாறாக, தன் மனைவிக்கு அடைக்கலம் கொடுத்த மாணிக்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறான் பக்கிரி.

இதனிடையே, சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஆற்றங்கரை யோரம் இருந்த குடிசைகள் மழை நீரில் மூழ்குகின்றனகுடிசைகள் மழை நீரில் மூழ்கியதால், இவர்கள் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளில் தங்க வைக்கப்படுகின்றனர்

இவர்களுக்கு உணவு வழங்க, செல்வம் படைத்தவர்கள் பலரும் முன் வந்து உணவு வழங்குகின்றனர். புயல் மழை குறைந்து, வெள்ளம் குறைந்த பிறகு மீண்டும் பள்ளமான ஆற்றோறப் பகுதிகளில் இவர்கள் குடிசைகள் அமைத்து இயல்பான வாழ்க்கைக்குச் செல்கின்றனர்.

 இதுதான் கதை.

இந்தக் கதையில் ஜெயகாந்தன் அந்தக் காலத்தில் குடிசை வாசிகள் எவ்வாறெல்லாம் வாழ்ந்தார்கள் அவர்களது வேதனைகள் - அவர்களுடைய பழக்க வழக்கங்கள் - அவர்களுடைய உறவு முறைகள் - இவைப் பற்றி எல்லாம் விவரமாக விளக்கி இருக்கிறார்.

பசி (வறுமை) வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அதில் கற்பும் அடங்கும் போல. கீழ்த்தட்டு மக்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று தெரிகிறது.

மேலும், சென்னையில் கனமழை பெய்தால் கடந்த காலங்களில் கீழ்கட்டு மக்கள்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், இப்போது கனமழை பெய்தால்  நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

அன்றைக்கு, நீர்வழிப் பாதைகளில் குடிசைகள் அமைத்து கீழ்கட்டு மக்கள் வாழ்ந்தார்கள். இன்றைக்கு நீர் நிலைகளை ஆக்கிரமித்து நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் வீடுகள் கட்டி வாழ்கிறார்கள். அதனால்தான், இப்பொழுது பெய்யும் கனமழைக்கு எல்லாத் தரப்பு மக்களும் பாதிக்கப் படுகிறார்கள்.

    அனைவரும் படிக்க வேண்டிய நூல் பிரளயம்.

 

-நூலகர் சி. சரவணன்.

 

 

Comments